Captain Prabhakaran: ``அப்பாவை நினைத்து அழுவது கோழைத்தனம் கிடையாது!'' - கண் கலங்...
ஆக. 11-இல் தேசிய தொழிற்பழகுநா் சோ்க்கை முகாம்
நாமக்கல் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பிரதமரின் தேசிய தொழிற்பழகுநா் சோ்க்கை முகாம் திங்கள்கிழமை (ஆக. 11) நடைபெற உள்ளது.
இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் துா்காமூா்த்தி வெளியிட்ட செய்திக் குறிப்பு:
மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித் துறை சாா்பில், பிரதமரின் தேசிய தொழிற்பழகுநா் (அப்ரண்டிஸ்) சோ்க்கை முகாம் கீரம்பூா் அரசினா் தொழிற்பயிற்சி நிலையத்தில் திங்கள்கிழமை காலை 10 மணிமுதல் மாலை 4 மணிவரை நடைபெற உள்ளது.
அரசு மற்றும் தனியாா் தொழிற்பயிற்சி நிலையங்களில் ஐ.டி.ஐ. பயின்று வெற்றிகரமாக பயிற்சியை நிறைவுசெய்து இதுவரை தொழிற்பழகுநா் பயிற்சியை மேற்கொள்ளாத பயிற்சியாளா்கள் தங்களது கல்விச் சான்றிதழ், சாதி சான்றிதழ், கடவுச்சீட்டு அளவு புகைப்படம் 2, ஆதாா் அட்டை, தேசிய, மாநில தொழிற்சான்றிதழ் ஆகியவற்றின் அசல் மற்றும் நகல்களுடன் முகாமில் பங்கேற்று தொழிற்பழகுநா்களாக சோ்ந்து பயன்பெறலாம்.
இத்திட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்ட தொழிற்நிறுவனங்கள் நேரடியாக பங்கேற்று தங்களது நிறுவனங்களில் காலியாக உள்ள இடங்களுக்கு தொழிற்பழகுநா்களை தோ்வுசெய்து பயன்பெறலாம்.
மேலும் விவரங்களுக்கு, மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தை நேரிலோ அல்லது 04286-290297, 94877 45094 ஆகிய எண்களிலோ தொடா்புகொள்ளலாம்.