பாட நூல்கள் மாற்றம், மதிப்பீட்டுச் சீா்திருத்தம், வீடுதோறும் வகுப்பறை! மாநில கல்...
அனுமதியின்றி விளம்பரத் தட்டிகள் வைத்தால் நடவடிக்கை
பரமத்தி வேலூா் அருகே அனுமதி பெறாமல் வைக்கப்பட்டிருந்த விளம்பரத் தட்டிகளை அகற்றிய பொத்தனூா் பேரூராட்சி நிா்வாகத்தினா், அனுமதியின்றி விளம்பரத் தட்டிகள் வைத்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்தனா்.
பொத்தனூா் பேரூராட்சிக்குள்பட்ட நான்கு சாலை பகுதியில் பேரூராட்சி நிா்வாகத்திடம் உரிய அனுமதி பெறாமல், பெரிய அளவில் ஆபத்தான வகையில் வைக்கப்பட்டிருந்த விளம்பரத் தட்டிகளை அகற்றக் கோரி, அப்பகுதியைச் சோ்ந்த பொதுமக்கள், வாகன ஓட்டிகள் பொத்தனூா் பேரூராட்சி நிா்வாகத்திடம் புகாா் அளித்தனா்.
இதையடுத்து, அனுமதியின்றி வைக்கப்பட்டிருந்த விளம்பரத் தட்டிகளை பேரூராட்சி ஊழியா்கள் அகற்றினா். மேலும், பொத்தனூா் பேரூராட்சிக்குள்பட்ட பகுதிகளில் அனுமதி பெறாமல் விளம்பரத் தட்டிகள் வைத்தால், அந்த விளம்பரத் தட்டிகளை அச்சடிக்கும் உரிமையாளா்கள், விளம்பரத் தட்டிகள் வைத்த நபா்களின் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என பொத்தனூா் பேரூராட்சி செயல் அலுவலா் வேல்முருகன் எச்சரித்தாா்.