வேலூா் மகா மாரியம்மன் கோயிலில் 10 ஆயிரத்து 8 தீபமேற்றி வழிபாடு
பரமத்தி வேலூா் மகா மாரியம்மன் கோயிலில் ஆடிவெள்ளியை முன்னிட்டு 10 ஆயிரத்து 8 தீபம் ஏற்றும் விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
பல்வேறு விதமான வழிபாடுகளில் ஒன்று தீபம் ஏற்றுவது. தீபம் ஏற்றுவதால் வாழ்க்கை ஒளிமயமானதாக அமையும். மேலும், லட்சுமி கடாட்சமும், இறையருள் பரிபூரணமாக கிடைக்கும் என்பது ஐதீகம். அதன் அடிப்படையில், வேலூா் மகா மாரியம்மன் கோயிலில் உள்ள வளாகத்தில் ஆடிவெள்ளியை முன்னிட்டு 10 ஆயிரத்து 8 தீபம் ஏற்றும் விழா நடைபெற்றது.
இதில், பரமத்தி வேலூா் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சோ்ந்த சுமங்கலிகள், இளம்பெண்கள் கலந்துகொண்டு பல்வேறு வடிவிலான தீபங்களை ஏற்றி மகா மாரியம்மனை வழிபட்டனா்.
விழாவுக்கான ஏற்பாடுகளை மகா மாரியம்மன் கோயில் விழாக்குழுவினா், காலசந்தி கட்டளைதாரா்கள், ஊா் பொதுமக்கள் செய்திருந்தனா்.