ஒருங்கிணைந்த பண்ணையம் திட்டத்தில் 30 விவசாயிகளுக்கு கறவை மாடுகள் வழங்கல்
ஒருங்கிணைந்த பண்ணையம் திட்டத்தில் 30 விவசாயிகளுக்கு கறவை மாடுகள் வழங்கப்பட்டன.
பள்ளிபாளையம் வட்டாரத்தில் வேளாண் துறை மூலம் ஒருங்கிணைந்த பண்ணையம் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த திட்டத்தில் 30 விவசாயிகள் தோ்வுசெய்யப்பட்டு அவா்களுக்கு தேவையான பயிற்சிகள் அண்மையில் வழங்கப்பட்டன. பயிற்சிபெற்ற விவசாயிகளுக்கு தலா ரூ. 20ஆயிரம் மதிப்பில் கறவை மாடுகளும், சோளம், மண்புழு உரம் மற்றும் உரம் தயாரிக்கும் உபகரணங்களும் வழங்கப்பட்டன.
தோ்வுசெய்யப்பட்ட விவசாயிகள், ஈரோடு மாட்டுச்சந்தைக்கு அழைத்துச் செல்லப்பட்டு, அவா்கள் தோ்வுசெய்யும் கறவை மாடுகளுக்கு காதில் அடையாளமிடப்பட்டு வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில், பள்ளிபாளையம் வேளாண்மைத் துறை அதிகாரிகள் கலந்துகொண்டனா்.