மசோதாவை நிறுத்திவைத்தால் ஆளுநரின் விருப்பப்படி அரசு எப்படி இருக்கும்? - உச்சநீதி...
ஆக. 22ல் பிகாரில் பல்வேறு திட்டங்களைத் தொடங்கி வைக்கிறார் பிரதமர் மோடி!
பிரதமர் நரேந்திர மோடி ஆகஸ்ட் 22ல் கயாஜி மாவட்டத்தில் பல்வேறு திட்டங்களைத் தொடங்கிவைத்து பேரணியில் உரையாற்ற உள்ளதாக துணை முதல்வர் சாம்ராட் சௌத்ரி புதன்கிழமை தெரிவித்தார்.
பிரதமரின் விழாவிற்கான ஏற்பாடுகளை மேற்பார்வையிட சௌத்ரி சமீபத்தில் கயாஜிக்குச் சென்றிருந்தார்.
இதுதொடர்பாக துணை முதல்வரின் எக்ஸ் பதிவில்,
பிரதமர் மோடி மீண்டும் பிகாருக்கு வருகை தருகிறார். ஆகஸ்ட் 22ல் கயாஜிக்கு வரும் பிரதமர் கங்கை நதியின் மீது பிகாரின் முதல் ஆறு வழிப் பாலம் மற்றும் ரூ. 1,200 கோடி மதிப்பிலான மேம்பாட்டுத் திட்டங்களைத் திறந்துவைத்து அடிக்கல் நாட்ட உள்ளார்.
நாட்டின் மிகவும் பிரபலமான தலைவரான பிரதமர் மோடியின் பேச்சைக் கேட்க நீங்கள் அனைவரும் கயாஜிக்கு வருமாறு நான் கேட்டுக்கொள்கிறேன்
முன்னதாக கடந்த ஏப்ரல் முதல் மோதிஹாரி, சிவான், மதுபானி, பாட்னா ஆகிய இடங்களுக்கு பிரதமர் சென்றிருந்தார். இந்த ஆண்டு இறுதியில் பிகார் சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.