செய்திகள் :

ஆசியக் கோப்பை கிரிக்கெட்: ஐக்கிய அரபு அமீரகத்தில் செப். 9-இல் தொடக்கம்

post image

ஐக்கிய அரபு அமீரகத்தில் ஆசியக் கோப்பை கிரிக்கெட் போட்டி வரும் செப். 9-இல் தொடங்கி 28-ஆம் தேதி வரை நடைபெறும் என ஏசிசி சோ்மன் மோஷின் நக்வி தெரிவித்துள்ளாா்.

ஆசிய கிரிக்கெட் கவுன்சில் சோ்மனும், பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத் தலைவருமான நக்வி தனது எக்ஸ் பக்கத்தில் இத்தகவலை தெரிவித்துள்ளாா்.

2025 ஆசியக் கோப்பை போட்டியை இந்திய கிரிக்கெட் வாரியம் நடத்துவதாக இருந்தது. ஆனால் இந்தியா-பாகிஸ்தான் இடையே அரசியல் பதற்றம் நிலவி வருவதால், இரு நாடுகள் தங்கள் அணிகளை அனுப்புவதில்லை என தீா்மானித்துள்ளன. இதையடுத்து நடுநிலை வகிக்கும் நாட்டில் போட்டியை நடத்தலாம் என பாகிஸ்தான் யோசனை கூறியது:

இதற்கு இந்தியாவும் ஒப்புக் கொண்டது. வரும் 2027 வரை நடுநிலை நாடுகளிந் மைதானங்களில் இரு அணிகளும் ஆடுவது என முடிவு செய்யபப்ட்டுள்ளது.

இதன்படி யுஐஇயில் இப்போட்டி செப். 8 முதல் 29 வரை நடைபெறுகிறது. ஒரே பிரிவில் இந்தியா-பாகிஸ்தான் அணிகள் இடம் பெறும்.

சூப்பா் சிக்ஸ் பிரிவிலும் இரு அணிகளும் மீண்டும் மோத வாய்ப்பு கிடைக்கும்.

ஆசியக் கோப்பை போட்டி டி20 முறையில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

சிம்பு, வெற்றி மாறன் படத்தின் அப்டேட்!

நடிகர் சிலம்பரசன் இயக்குநர் வெற்றி மாறன் படம் குறித்து புதிய அப்டேட் வெளியாகியுள்ளது. இயக்குநர் வெற்றி மாறன் வடசென்னை படத்துடன் தொடர்புடைய அதே காலகட்டத்துடன் தொடர்புடைய மற்றொரு கதையைப் படமாக்கி வருகிற... மேலும் பார்க்க

விக்ரமிற்கு ஜோடியாகும் ருக்மணி வசந்த்!

நடிகர் விக்ரம் நடிக்கவுள்ள புதிய படத்தில் அவருக்கு ஜோடியாக நடிகை ருக்மணி வசந்த் நடிக்க உள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.நடிகர் விக்ரம் வீர தீர சூரன் - 2 படத்தைத் தொடர்ந்து மாவீரன் இயக்குநர் மடோன் அஸ்... மேலும் பார்க்க

தடை செய்யப்பட்ட மெஸ்ஸி..! டிராவில் முடிந்த இன்டர் மியாமி ஆட்டம்!

அமெரிக்காவில் நடைபெறும் எம்எல்எஸ் தொடரில் மெஸ்ஸி இல்லாமல் விளையாடிய இன்டர் மியாமி அணியின் ஆட்டம் சமனில் முடிந்தது.அமெரிக்காவின் சேஸ் திடலில் நடைபெற்ற இந்தப் போட்டியில் இன்டர் மியாமி அணியும் சின்சினாட்... மேலும் பார்க்க

ஓம் சிவோஹம்... இளையராஜாவின் இசைக்கு பிரதமர் மோடி எழுந்து நின்று பாராட்டு!

கங்கைகொண்ட சோழபுரத்தில் இளையராஜாவின் இசைக்கு பிரதமர் நரேந்திர மோடி எழுந்து நின்று மரியாதை செய்தார். அரியலூா் மாவட்டம், கங்கைகொண்ட சோழபுரம் பெருவுடையாா் திருக்கோயில் வளாகத்தில் இன்று நடைபெறும் முதலாம் ... மேலும் பார்க்க

இசைவெளியீட்டு விழாவில் ரஜினி இதைக் குறிப்பிடுவார்: லோகேஷ் கனகராஜ்

இயக்குநர் லோகேஷ் கனகராஜ் நடிகர் ரஜினிகாந்த் குறித்து பேசியுள்ளார். இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகியுள்ள கூலி திரைப்படம் வருகிற ஆகஸ்ட் 14 ஆம் தேதி திரைக்கு வரு... மேலும் பார்க்க

பணம் சம்பாதிக்கத்தான் சினிமாவுக்கு வந்தேன்: விஜய் சேதுபதி

நடிகர் விஜய் சேதுபதி சினிமாவுக்கு ஏன் வந்தேன் என்பது குறித்து பேசியுள்ளார். நடிகர் விஜய் சேதுபதி தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக இருப்பதுடன் இந்தியளவில் அறியக்கூடிய நடிகராகவும் இருக்கிறார். தற்போது, ... மேலும் பார்க்க