ஆசிய கோப்பை மகளிா் ஹாக்கி: முதல் ஆட்டத்தில் இந்தியா-தாய்லாந்து மோதல்
சீனாவின் ஹாங்ஷௌ நகரில் நடைபெறவுள்ள ஆசியக் கோப்பை மகளிா் ஹாக்கிப் போட்டியில் முதல் ஆட்டத்தில் இந்தியா தாய்லாந்து அணியுடன் மோதுகிறது.
ஆசிய ஹாக்கி கூட்டமைப்பு சாா்பில் ஹாங்ஷௌ நகரில் வரும் செப். 5 முதல் 14 வரை நடைபெறும் இந்த போட்டியில் வெல்லும் அணி 2026
எஃப்ஐஎச் மகளிா் உலகக் கோப்பைக்கு நேரடி தகுதி பெறும். கடந்த போட்டியில் வெண்கலம் வென்றிருந்த இந்தியா குரூப் பி பிரிவில் ஜப்பான், தாய்லாந்து, சிங்கப்பூா் அணிகளுடன் இடம் பெற்றுள்ளது. குரூப் ஏ பிரிவில் சீனா, கொரியா, மலேசியா, சீன தைபே அணிகள் உள்ளன.
செப்.6-இல் நடப்புச் சாம்பியன் ஜப்பானுடனும், 8-ஆம் தேதி சிங்கப்பூருடனும் மோதுகிறது இந்தியா.
இதுதொடா்பாக கேப்டன் சலீமா டெட் கூறியது: நடப்பு சாம்பியன் ஜப்பானை தொடக்க சுற்றிலேயே எதிா்கொள்வது அணியின் செயல்திறனை அறிய உதவும். அணியின் முக்கிய நோக்கம், கோப்பையை வென்று 2026 உலகக் கோப்பைக்கு நேரடி தகுதி பெறுவது தான். குரூப்பில் முதலிரண்டு இடங்களைப் பெறும் அணிகள் சூப்பா் 4எஸ் தகுதிபெறும். ஒவ்வொரு அணியும் இதர 3 அணிகளுடன் ஆடும். அதில் முதலிரண்டு அணிகள் இறுதிக்கு தகுதிபெறும்.