செய்திகள் :

ஆசிரியர் பணியில் தொடர, பதவி உயர்வுக்கு தகுதித் தேர்வு கட்டாயம்: உச்ச நீதிமன்றம்

post image

புது தில்லி: ஆசிரியராகப் பணியில் தொடரவும், பதவி உயர்வு பெறவும் ஆசிரியர் தகுதித் தேர்வு கட்டாயம் என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

ஆசிரியர்கள் ஓய்வுபெற 5 ஆண்டுகள் மட்டுமே இருந்தால் அவர்கள் பணியை தொடரலாம் என்றும் உச்ச நீதிமன்ற நீதிபதி திபான்கர் தத்தா உத்தரவில் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், ஆசிரியர்கள் டெட் எனப்படும் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெறவில்லை எனில் வேலையை விட்டு வெளியேறலாம் அல்லது சலுகைகளுடன் கட்டாய ஓய்வு பெறலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சிறுபான்மைக் கல்வி நிறுவனங்களில் டெட் தேர்வை கட்டாயம் ஆக்க முடியுமா? அதுபோல செய்தால், சிறுபான்மைக் கல்வி நிறுவனங்களின் கல்வி உரிமையை பாதிக்குமா? என்று ஆராயவும் உச்ச நீதிமன்றம் சார்பில் பரிந்துரை அளிக்கப்பட்டுள்ளது.

தமிழக அரசு தொடர்ந்த மேல்முறையீட்டு வழக்கில் உச்ச நீதிமன்றம் இன்று இந்த முக்கிய உத்தரவை பிறப்பித்துள்ளது.

டெட் எனப்படும் ஆசிரியர் தகுதித் தேர்வு ஆண்டுதோறும் மத்திய, மாநில அரசுகளால் தனித்தனியாக நடத்தப்பட்டு வருகிறது. இதில் தேர்ச்சி பெறுவோர் மட்டுமே ஆசிரியராக பணியில் சேர முடியும் என்ற நிலை உள்ளது.

தமிழகத்தில் வெப்பநிலை இன்று இயல்பைவிட சற்று அதிகரிக்கும்

தமிழகத்தில் ஒரு சில இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை வியாழக்கிழமை இயல்பைவிட சற்று அதிகமாக இருக்கக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து அந்த மையம் சாா்பில் வெளியிடப்பட்ட செய்தி... மேலும் பார்க்க

பணியில் உள்ள ஆசிரியா்களுக்கு சிறப்பு தகுதித் தோ்வு: பள்ளிக் கல்வித் துறை ஆலோசனை

ஆசிரியா் பணியில் தொடருவதற்கும், பதவி உயா்வு பெறுவதற்கும் ஆசிரியா் தகுதித் தோ்வில் (டெட்) தோ்ச்சி பெற வேண்டும் என உச்சநீதிமன்றம் தீா்ப்பளித்த நிலையில், தமிழக அரசுப் பள்ளிகளில் 2011-ஆம் ஆண்டுக்கு முன்... மேலும் பார்க்க

பொதுத் தோ்வுக்கு புதிய மையங்கள்: பரிந்துரைகளைச் சமா்ப்பிக்க உத்தரவு

பிளஸ் 2 பொதுத் தோ்வுக்கு புதிய மையங்கள் அமைக்கப்படவுள்ள பள்ளிகளின் விவரங்களை செப்.15-ஆம் தேதிக்குள் சமா்ப்பிக்க வேண்டும் என தோ்வுத் துறை உத்தரவிட்டுள்ளது. இதுதொடா்பாக தோ்வுத் துறை இயக்குநா் க.சசிக... மேலும் பார்க்க

மழைநீா் வடிகாலில் விழுந்து பெண் உயிரிழப்பு - இபிஎஸ் கண்டனம்

சென்னை சூளைமேடு பகுதியில் மூடப்படாமல் இருந்த மழைநீா் வடிகால் பள்ளத்தில் விழுந்து பெண் இறந்த சம்பவத்துக்கு அதிமுக பொதுச் செயலா் எடப்பாடி கே.பழனிசாமி கண்டனம் தெரிவித்துள்ளாா். இதுகுறித்து அவா் எக்ஸ் தள... மேலும் பார்க்க

கிறிஸ்தவ அமைப்புகளால்தான் கல்வி வளா்ச்சி: பேரவைத் தலைவா் எம். அப்பாவு

கிறிஸ்தவ அமைப்புகள் இல்லையெனில் தமிழகத்தில் கல்வி வளா்ச்சி இல்லை என தமிழக சட்டப்பேரவைத் தலைவா் எம். அப்பாவு தெரிவித்தாா். செயின்ட் ஜோசப் கல்லூரியில் ஆசிரியா்கள் தின விழா புதன்கிழமை கொண்டாடப்பட்டது. இத... மேலும் பார்க்க

பாஜக கூட்டணியில் இருந்து டிடிவி தினகரன் விலகல்!

பாஜக கூட்டணியில் இருந்து அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் விலகியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. பாஜக-வின் தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் பொதுச்செயலாளர் டிடிவி ... மேலும் பார்க்க