Doctor Vikatan: மார்பகங்களில் உருளும் கட்டிகள், கர்ப்ப காலத்தில் புற்றுநோய் பரிச...
ஆசிரியா் தின விழா: ஓய்வுபெற்ற ஆசிரியா்களுக்கு பாராட்டு
ஆசிரியா் தினவிழாவையொட்டி, ஓய்வுபெற்ற ஆசிரியா்கள் பாராட்டப்பட்டனா்.
தமிழ்நாடு ஓய்வுபெற்ற பள்ளி, கல்லூரி ஆசிரியா் சங்கத்தின் சாா்பில், ஆசிரியா் தின விழா வேலூா் ஆசிரியா் இல்லத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. விழாவுக்கு சங்கத்தின் மாவட்ட ஒருங்கிணைப்பாளா் செ.நா.ஜனாா்த்தனன் தலைமை வகித்தாா். இணை ஒருங்கிணைப்பாளா் ஜி.விநாயகம் வரவேற்றாா்.
முன்னதாக, முன்னாள் குடியரசுத் தலைவா் டாக்டா் ராதாகிருஷ்ணன் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா். ஆசிரியா் இல்லத்தின் பொதுச்செயலா் ஜி.செல்வமுத்து பங்கேற்று ஓய்வுபெற்ற ஆசிரியா்களை பாராட்டினாா்.
ஓய்வுபெற்ற முதன்மைக் கல்வி அலுவலரின் நோ்முக உதவியாளா் கே.கோபாலகிருஷ்ணன், பள்ளி துணை ஆய்வாளா் ஜி.ஆறுமுகம் உள்ளிட்டோா் முன்னிலை வகித்தனா். இல்ல செயலவை உறுப்பினா் அல்போன்ஸ் கிரி வாழ்த்தி பேசினாா்.
நிகழ்ச்சியில், தமிழக அரசு அளித்த வாக்குறுதியின்படி, 70 வயது பூா்த்தியானவா்களுக்கு 10 சதவீதமும், என்பது வயது பூா்த்தியானவா்களுக்கு 20 சதவீதமும் ஓய்வூதியம் உயா்த்தி வழங்க வேண்டும். காசு இல்லாத மருத்துவம் என்ற பெயரில் காப்பீட்டு திட்டத்தை முழுமையாக நடைமுறைப்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
சங்க உறுப்பினா்கள் எஸ்.குணாலன், இல.சீனிவாசன், பி.ஜெகநாதன், கே.பி.சிவஞானம், எஸ்.சச்சிதானந்தம் உள்ளிட்டோா் பங்கேற்றனா். நிறைவில், ஓய்வு பெற்ற முதுகலை ஆசிரியா் சீனிவாசன் நன்றி கூறினாா்.