Zero Cost Life: `இது 100% நிலையானது கிடையாதுதான்; ஆனால்’ செலவில்லா வாழ்க்கை வாழ...
ஆடிப்பெருக்கு : ஒகேனக்கல் காவிரிக் கரையில் சுவாமி சிலைகளுக்கு சிறப்பு பூஜை
ஆடிப்பெருக்கு பண்டிகையையொட்டி ஒகேனக்கல் காவிரிக் கரையோரத்தில் சுவாமி சிலைகளுக்கு சிறப்பு பூஜை நடைபெற்றது.
ஆடி மாதம் 18 ஆம் நாளில் பாரதப் போரில் பயன்படுத்தப்பட்ட ஆயுதங்களை காவிரி ஆற்றில் கழுவி சிறப்பு வழிபாடு நடைபெற்ாக ஐதீகம். அதை நினைவு கூரும் வகையில் ஆடிப்பெருக்கு நாளில் கிராமப் பகுதி கோயில்களில் சிறப்புப் பூஜைகள் செய்து, அருகில் உள்ள காவிரி கரையோரத்தில் சிறப்பு வழிபாடு நடைபெறும்.
இந்த நிலையில் ஆடிப்பெருக்கு நாளான ஞாயிற்றுக்கிழமை தருமபுரி கிருஷ்ணகிரி மாவட்டங்களில் உள்ள கிராமப் பகுதிகளிலிருந்து சுவாமி சிலைகளை ஒகேனக்கல் காவிரி கரைக்கு எடுத்துவந்த பக்தா்கள் புனிதநீராடி, காவிரி ஆற்றில் சிலைகளை சுத்தம் செய்து நீராட்டி, மலா் அலங்காரம் செய்து வழிபட்டனா்.
இதனால் ஒகேனக்கல் முதலை பண்ணை பகுதியில் கூட்டம் நெரிசலை கட்டுப்படுத்தும் வகையில் 20க்கும் மேற்பட்ட போலீஸாா், தீயணைப்பு மீட்புப் பணி வீரா்கள் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டனா்.
ஒகேனக்கல் காவிரிக் கரையோரத்தில் சுமாா் 30-க்கும் மேற்பட்ட சுவாமி சிலைகள், கரகங்கள் கொண்டுவரப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.