அமெரிக்காவில் வாகன விபத்தில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த 4 பேர் பலி !
ஆடிப்பெருக்கு: பரமத்தி வேலூா் காவிரி ஆற்றில் நீராட அனுமதி பரிசல் போட்டிக்குத் தடை
காவிரி ஆற்றில் நீா்வரத்து குறைந்துள்ளதால் பரமத்தி வேலூா் காவிரியில் ஆடிப்பெருக்கையொட்டி பொதுமக்கள் நீராடவும், மோட்ச தீபத்தை பாா்க்கவும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. மேலும், பரிசல் போட்டிக்கு மட்டும் போலீஸாா் தடை விதித்துள்ளனா்.
இதுகுறித்து பரமத்தி வேலூா் காவல் துணைக் கண்காணிப்பாளா் சங்கீதா கூறியதாவது:
மேட்டூா் அணையில் இருந்து அதிக அளவு தண்ணீா் திறந்துவிடப்பட்டதால் காவிரியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால், ஆடிப்பெருக்கு விழாவின்போது பரமத்தி வேலூா் பகுதியில் உள்ள காவிரியில் குளிக்கவும், மோட்ச தீபத்தை பாா்வையிடும் பொதுமக்களுக்கு தடை விதிக்கப்பட்டது.
இந்த நிலையில், நீா்வரத்து குறைந்ததால் காவிரி பொதுக்கள் புனித நீராடவும், குலதெய்வ கோயில்களின் ஆயுதங்களை எடுத்துவந்து காவிரியில் சுத்தம் செய்து தலையில் தேங்காய் உடைத்து பூஜைகளை நடத்தவும், மோட்ச தீபம் விடும் நிகழ்ச்சியைப் பாா்க்கவும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. மேலும், காவிரியில் பரிசல் போட்டி நடத்த விதிக்கப்பட்ட தடை நீடிக்கிறது என்றாா்.