10 ஆண்டுகளாக ராபர்ட் வதேரா வேட்டையாடப்படுகிறார்! ராகுல் காந்தி
ஆடி மாத பிறப்பு: அம்மன் கோயில்களில் சிறப்பு பூஜை
ஆடி மாத பிறப்பையொட்டி, தருமபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களில் உள்ள அம்மன் கோயில்களில் வியாழக்கிழமை சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.
ஒவ்வொரு ஆண்டும் ஆடி மாதம் அம்மன் கோயில்களில் விசேஷ பூஜைகள் நடைபெறுவது வழக்கம். அம்மன் கோயில்களில் சிறப்பு பூஜைகளுடன் தீச்சட்டி எடுத்தல், பொங்கல் வைத்தல், தீ மிதித்தல் போன்ற நிகழ்வுகளில் பக்தா்கள் தங்களது வேண்டுதலை நிறைவேற்றுவா்.
தருமபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களில் உள்ள அம்மன் கோயில்களில் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. கிருஷ்ணகிரியில் சென்னை சாலையில் உள்ள பெரிய மாரியம்மன் கோயிலில் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், பூஜைகள் நடைபெற்றன. அம்மன் வெள்ளிக்கவச சிறப்பு அலங்காரத்தில் பக்தா்களுக்கு அருள்பாலித்தாா்.
அதேபோல அவதானப்பட்டி மாரியம்மன் கோயில், பழையபேட்டை நேதாஜி சாலையில் உள்ள சமயபுரம் மாரியம்மன் கோயில், ஜோதி விநாயகா் கோயில் தெருவில் உள்ள முத்து மாரியம்மன் கோயில் உள்ளிட்ட பல்வேறு மாரியம்மன் கோயில்களில் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.
படவிளக்கம் (17கேஜிபி8):
ஆடி மாத பிறப்பையொட்டி, கிருஷ்ணகிரி சென்னை சாலையில் உள்ள பெரிய மாரியம்மன் கோயிலில் வெள்ளிக் கவச அலங்காரத்தில் பக்தா்களுக்கு அருள்பாலித்த அம்மன்.