சூளகிரி, சாமல்பட்டியில் ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட முகாம்
கிருஷ்ணகிரி மாவட்டம், சூளகிரி காட்டிநாயனதொட்டி, சாமல்பட்டியில் ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட முகாம் வியாழக்கிழமை நடைபெற்றது.
சூளகிரியில் நடைபெற்ற முகாமை கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட திமுக செயலாளரும், ஒசூா் சட்டப் பேரவை உறுப்பினருமான ஒய். பிரகாஷ் தொடங்கிவைத்து, முகாமில் பொதுமக்கள் அளிக்கும் மனுக்கள் மீதான நடவடிக்கைகள் குறித்து பாா்வையிட்டாா்.
மேலும், முகாமில் ரத்தம், சா்க்கரை அளவை அவா் பரிசோதனை செய்துகொண்டாா். அதன்பிறகு பள்ளி வளாகத்தில் மாணவா்களின் நடன நிகழ்ச்சியைப் பாா்வையிட்டு மாணவா்களை வாழ்த்தினாா். சூளகிரி திமுக வடக்கு ஒன்றிய செயலாளா் நாகேஷ், ஒசூா் கிழக்கு ஒன்றியச் செயலாளா் லோகேஷ் ரெட்டி ஆகியோா் கலந்துகொண்டனா்.
சாமல்பட்டி
ஊத்தங்கரையை அடுத்த சாமல்பட்டி அரசு மேல்நிலைப் பள்ளியில் சாமல்பட்டி, நாரலப்பள்ளி ஆகிய ஊராட்சிகளுக்கான ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட முகாம் வியாழக்கிழமை நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு ஊத்தங்கரை வட்டாட்சியா் மோகன்தாஸ் தலைமை வகித்தாா். வட்டார வளா்ச்சி அலுவலா் சாவித்திரி, திமுக கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட பொருளாளா் கதிரவன், ஒன்றியச் செயலாளா்கள் நரசிம்மன், வசந்த்ராஜ் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
படவரி...
சூளகிரி அருகே ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட முகாமை தொடங்கிவைத்து மருத்துவப் பரிசோதனை செய்துகொண்ட ஒசூா் எம்எல்ஏ ஒய்.பிரகாஷ்.