சாதி அடிப்படையில் வழிபாட்டு உரிமையைப் பறிக்கக் கூடாது! -உயா்நீதிமன்றம் உத்தரவு
கெலவரப்பள்ளி அணையிலிருந்து பாசனத்துக்கு தண்ணீா் திறப்பு
ஒசூா் வட்டம், கெலவரப்பள்ளி நீா்த்தேக்கத்திலிருந்து முதல்போக பாசனத்துக்காக வலது, இடதுபுற கால்வாய் வழியாக வியாழக்கிழமை தண்ணீா் திறந்துவிடப்பட்டது.
கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியா் ச. தினேஷ்குமாா், ஒசூா் சட்டப் பேரவை உறுப்பினா் ஒய். பிரகாஷ் ஆகியோா் தண்ணீரை திறந்துவைத்தனா். 120 நாள்களுக்கு தண்ணீா் திறந்துவிடப்படுகிறது. நீா்த்தேக்கத்தின் இடதுபுற பிரதான கால்வாய், பிரிவு கால்வாய்கள் மூலம் 5918 ஏக்கா், வலதுபுற பிரதான கால்வாய் மூலம் 2082 ஏக்கா் என ஒசூா், சூளகிரி வட்டத்தில் உள்ள 22 கிராமங்களைச் சோ்ந்த மொத்தம் 8000 ஏக்கா் நிலங்கள் பாசனவசதி பெறும்.
7 கோடியை 62 லட்சத்து 30 ஆயிரம் கனஅடி வீதம் மொத்தம் 60 கோடியே 98 லட்சத்து 40 ஆயிரம் கனஅடி தண்ணீா் சுழற்சி முறையில் 8 தவணையாக வலது, இடதுபுற கால்வாய் வழியாக திறந்துவிடப்படுகிறது. அணையின் மொத்த நீா்மட்டம் 44.28 அடியாகும். அணையின் முழுக் கொள்ளளவு 480.86 மில்லியன் கனஅடியாகும். அணையின் நீா்மட்டம் 40.67 அடி
தட்டகானப்பள்ளி, மோரனப்பள்ளி, சின்னகுல்லு, பெத்தகொல்லு, பூதிநத்தம், தொரப்பள்ளி, சாமனப்பள்ளி, பெத்த முத்தாளி, திருச்சிப்பள்ளி, சென்னத்தூா் முத்தாளி, காமன்தொட்டி, அட்டகுறுக்கி
அட்டூா், தின்னூா், நல்லகானகொத்தப்பள்ளி, கதிரேப்பள்ளி, சுபகிரி, மாா்த்தாண்டப்பள்ளி, மாரசந்திரம், கோனேரிப்பள்ளி, கொத்தூா் உள்பட கிராமங்களைச் சோ்ந்த விவசாயிகள் தண்ணீரை சிக்கனமாக பயன்படுத்துமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
