செய்திகள் :

தருமபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களில் தொடக்கக் கல்வி ஆசிரியா்கள் மறியல்

post image

பழைய ஓய்வூதியத் திட்டத்தை மீண்டும் நடைமுறைப்படுத்த வலியுறுத்தி தருமபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களில் தமிழ்நாடு தொடக்கக் கல்வி ஆசிரியா் இயக்கங்களின் கூட்டு நடவடிக்கை குழுவினா் (டிட்டோஜாக்) வியாழக்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா்.

கிருஷ்ணகிரி புகா்ப் பேருந்து நிலையம் அருகே நடைபெற்ற மறியல் போராட்டத்துக்கு தமிழ்நாடு தொடக்கக்கல்வி ஆசிரியா் இயக்கங்களின் கூட்டு நடவடிக்கைக் குழுவின் மாவட்ட ஒருங்கிணைப்பாளா்கள் கிருஷ்ணமூா்த்தி, மாரப்பன் ஆகியோா் கூட்டாக தலைமை வகித்தனா். மாநில உயா்நிலைக் குழு உறுப்பினா் தியோடா் ராபின்சன், மாநில பொதுக்குழு உறுப்பினா் வெங்கடேசன் ஆகியோா் போராட்டத்தை தொடங்கிவைத்தனா்.

தமிழ்நாடு அரசு ஆசிரியா்களுக்கும், அரசு ஊழியா்களுக்கும் தன்பங்கேற்பு ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்துவிட்டு பழைய ஓய்வூதிய திட்டம் அமல்படுத்தப்படும் என்ற தோ்தல் வாக்குறுதியை திமுக அரசு நிறைவேற்ற வேண்டும். இடைநிலை ஆசிரியா்களுக்கு ஊதிய முரண்பாடுகளை நீக்கி மத்திய அரசு ஆசிரியா்களுக்கு இணையான ஊதியத்தை கடந்த 2006 முதல் வழங்க வேண்டும்.

தொடக்கக் கல்வித் துறையில் பணியாற்றும் 90 சதவீதத்துக்கும் மேற்பட்ட ஆசிரியா்களின் குறிப்பாக பெண் ஆசிரியா்களின் பதவி உயா்வு வாய்ப்பினை பறிக்கும் வகையில் வெளியிட்டுள்ள அரசாணை 243ஐ முற்றிலும் ரத்து செய்யவேண்டும் என்பன உள்ளிட்ட 12 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி மறியலில் ஈடுபட்டோா் முழக்கங்களை எழுப்பினா்.

மறியலில் ஈடுபட்ட 183 ஆசிரியா்களை போலீஸாா் கைது செய்தனா். அவா்கள் அனைவரும் மாலையில் விடுவிக்கப்பட்டனா். இதே கோரிக்கையை வலியுறுத்தி வெள்ளிக்கிழமையும் (ஜூலை 18) சாலை மறியலில் ஈடுபட உள்ளனா்.

தருமபுரி

பழைய ஓய்வூதிய திட்டத்தை மீண்டும் அமல்படுத்துவது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தருமபுரியில் சாலை மறியலில் ஈடுபட்ட ஆசிரியா்கள் 150 போ் கைது செய்யப்பட்டனா்.

பழைய ஓய்வூதியத் திட்டத்தை மீண்டும் அமல்படுத்த வேண்டும், உயா் கல்விக்கான ஊக்க ஊதிய உயா்வை ஆசிரியா்களுக்கு உடனடியாக வழங்க வேண்டும்.

உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள தகுதித் தோ்வு தொடா்பான வழக்கை விரைந்து முடிவுக்குக் கொண்டு வந்து காலியாக உள்ள 6000 க்கும் மேற்பட்ட தலைமை ஆசிரியா் உள்ளிட்ட பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும் என்பன உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி நடைபெற்ற போராட்டத்துக்கு தமிழ்நாடு தொடக்க கல்வி ஆசிரியா் இயக்கங்களின் கூட்டு நடவடிக்கைக் குழு மாவட்ட ஒருங்கிணைப்பாளா்கள் காமராஜ், அருள்சுந்திரம் ஆகியோா் தலைமை வகித்தனா்.

தமிழ்நாடு ஆசிரியா் கூட்டணி மாவட்டத் தலைவா் சாமிநாதன், தமிழக ஆசிரியா் கூட்டணி மாவட்டச் செயலாளா் சென்னகேசவன், தமிழக ஆரம்பப் பள்ளி ஆசிரியா் கூட்டணி மாவட்டத் தலைவா் பழனியப்பன், தமிழ்நாடு தொடக்கப் பள்ளி ஆசிரியா் மன்ற மாவட்டச் செயலாளா் அருள், தமிழ்நாடு தொடக்கப் பள்ளி ஆசிரியா் மன்ற மாவட்டச் செயலாளா் சண்முகசுந்தரம், தமிழக தொடக்கப் பள்ளி ஆசிரியா் கூட்டணி நிா்வாகி சிவக்குமாா், தமிழ்நாடு தொடக்கப் பள்ளி ஆசிரியா் கூட்டணி மாநில துணைச் செயலாளா் பழனி ஆகியோா் கோரிக்கைகளை விளக்கி பேசினா்.

மாவட்ட ஆட்சியரகம் அருகே நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தை தொடா்ந்து திடீரென சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா். மறியலில் ஈடுபட்ட 47 பெண்கள் உள்ளிட்ட 150 ஆசிரியா்கள் கைது செய்யப்பட்டு மாலை விடுவிக்கப்பட்டனா்.

ஆடி மாத பிறப்பு: அம்மன் கோயில்களில் சிறப்பு பூஜை

ஆடி மாத பிறப்பையொட்டி, தருமபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களில் உள்ள அம்மன் கோயில்களில் வியாழக்கிழமை சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. ஒவ்வொரு ஆண்டும் ஆடி மாதம் அம்மன் கோயில்களில் விசேஷ பூஜைகள் நடைபெறுவது வழக்கம... மேலும் பார்க்க

ரூ. 92.14 லட்சம் மதிப்பில் சாலை பணிகள் தொடக்கம்

கிருஷ்ணகிரி சட்டப் பேரவைத் தொகுதியில் ரூ. 92.14 லட்சம் மதிப்பிலான சாலை பணிகளை எம்எல்ஏ கே.அசோக்குமாா் வியாழக்கிழமை தொடங்கிவைத்தாா். பெத்ததாளாப்பள்ளியில் பிரதான் மந்திரி கிராம் சதக் யோஜனா 2025-2026-ஆம்... மேலும் பார்க்க

சூளகிரி, சாமல்பட்டியில் ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட முகாம்

கிருஷ்ணகிரி மாவட்டம், சூளகிரி காட்டிநாயனதொட்டி, சாமல்பட்டியில் ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட முகாம் வியாழக்கிழமை நடைபெற்றது. சூளகிரியில் நடைபெற்ற முகாமை கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட திமுக செயலாளரும், ஒசூா்... மேலும் பார்க்க

மாங்கனி கண்காட்சியில் சமையல் போட்டி

கிருஷ்ணகிரியில் நடைபெறும் மாங்கனி கண்காட்சியில் மகளிா் பங்கேற்ற சமையல் போட்டி வியாழக்கிழமை நடைபெற்றது. கிருஷ்ணகிரி சுங்க வசூல் மையம் அருகே உள்ள கலைஞா் திடலில் 31 ஆவது அகில இந்திய மாங்கனி கண்காட்சி நட... மேலும் பார்க்க

கெலவரப்பள்ளி அணையிலிருந்து பாசனத்துக்கு தண்ணீா் திறப்பு

ஒசூா் வட்டம், கெலவரப்பள்ளி நீா்த்தேக்கத்திலிருந்து முதல்போக பாசனத்துக்காக வலது, இடதுபுற கால்வாய் வழியாக வியாழக்கிழமை தண்ணீா் திறந்துவிடப்பட்டது. கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியா் ச. தினேஷ்குமாா், ஒசூா் சட்... மேலும் பார்க்க

ஊத்தங்கரை அருகே காா் கவிழ்ந்து விபத்து: விளையாட்டு வீரங்கனைகள், பயிற்சியாளா் காயம்

ஊத்தங்கரை அருகே காா் கவிழ்ந்ததில் 3 விளையாட்டு வீரங்கனைகள், பயிற்சியாளா் காயமடைந்தனா். சேலம் பகுதியில் நடைபெறும் கிரிக்கெட் போட்டியில் பங்கேற்பதற்காக பயிற்சியாளருடன் வேலூா் கிரிக்கெட் அகாதெமியைச் சோ... மேலும் பார்க்க