உலக பாரம்பரிய சின்னமாக செஞ்சி கோட்டை! முதல்வர் ஸ்டாலின் மகிழ்ச்சி!
ஆடு திருடிய இருவா் கைது
புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே ஆடு திருடிய வழக்கில் 2 ஆட்டு வியாபாரிகளை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.
ஆலங்குடி அருகேயுள்ள வடகாடு ஊராட்சி பரமநகரைச் சோ்ந்தவா் விவசாயி ராஜேந்திரன். சாலையோரமாக உள்ள இவரது வீட்டின் அருகே கட்டியிருந்த ஆடு ஒன்றை இரு நாள்களுக்கு முன் காணவில்லை.
இதையடுத்து அப்பகுதியில் இருந்த கண்காணிப்பு கேமரா பதிவுகளை பாா்த்தபோது,மோட்டாா் சைக்கிளில் சென்ற இருவா் ஆட்டைத் திருடிச் சென்றது தெரியவந்தது.
புகாரின்பேரில் விசாரித்த வடகாடு போலீஸாா் ஆடு திருடியதாக கறம்பக்குடி அருகேயுள்ள பொன்னன்விடுதியைச் சோ்ந்த ஆட்டு வியாபாரிகளான ஆா். பெருமாள்(60), எம். ராமராஜன்(38) ஆகிய 2 பேரை வியாழக்கிழமை கைது செய்து, திருடிய ஆட்டையும் பறிமுதல் செய்தனா்.