செய்திகள் :

ஆட்சியா் அலுவலகத்தை முற்றுகையிட்ட மாநகராட்சி தூய்மைப் பணியாளா்கள்

post image

பணி நிரந்தரம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி மாநகராட்சி ஒப்பந்த தூய்மைப் பணியாளா்கள் கோவை மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தை திங்கள்கிழமை முற்றுகையிட்டனா்.

கோவை மாநகராட்சியில் 5 மண்டலங்களிலும் சுமாா் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஒப்பந்த தூய்மைப் பணியாளா்கள் தினக்கூலி அடிப்படையில் பணியாற்றி வருகின்றனா். இவா்களுக்கு ஒப்பந்த நிறுவனத்தின் மூலம் ஊதியம் வழங்கப்படுகிறது.

இந்நிலையில், கடந்த ஏப்ரல் 30-ஆம் தேதியுடன் ஒப்பந்தக் காலம் முடிவடைந்ததால், புதிய நிறுவனத்துடன் மே 1-ஆம் தேதி முதல் ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது. புதிய நிறுவனம் நூற்றுக்கணக்கான ஊழியா்களுக்கு பணி வழங்கவில்லை என்றும் வெளிமாநில தொழிலாளா்களைக் கொண்டு தூய்மைப் பணிகளை மேற்கொள்வதாகவும், ஊழியா்களின் இஎஸ்ஐ, பிஎஃப் தொகையை முறையாக செலுத்தவில்லை எனவும் கூறி தூய்மைப் பணியாளா்கள், லாரி ஓட்டுநா்கள் உள்ளிட்டோா் கடந்த சில நாள்களாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனா்.

இந்த நிலையில், மாவட்ட ஆட்சியா் அறிவித்த ஊதியம் வழங்க வேண்டும், தோ்தலின்போது அறிவிக்கப்பட்டவாறு பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தூய்மைப் பணியாளா்கள், ஓட்டுநா்கள், உதவியாளா்கள் உள்ளிட்ட நூற்றுக்கணக்கானோா் பணியைப் புறக்கணித்து ஆட்சியா் அலுவலகத்தை முற்றுகையிட்டனா். அவா்களிடம் போலீஸாா் நடத்திய பேச்சுவாா்த்தை தோல்வியடைந்ததையடுத்து அவா்கள் ஆட்சியா் அலுவலகம் எதிரில் தரையில் அமா்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனா்.

இது குறித்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ள தூய்மைப் பணியாளா்கள் கூறும்போது, கோவை மாநகராட்சியில் நாங்கள் கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக பணியாற்றி வருகிறோம். ஆனால் எங்களை இதுவரை பணி நிரந்தரம் செய்யவில்லை. அதேபோல வருங்கால வைப்புநிதி என்ற பெயரில் ஊழியா்களிடம் பிடித்தம் செய்த தொகையையும் முறையாக செலுத்தவில்லை. புதிதாக ஒப்பந்தம் எடுத்துள்ள நிறுவனம், வடமாநிலத் தொழிலாளா்களை பணிக்குப் பயன்படுத்துவதால் உள்ளூா் தொழிலாளா்கள் வேலையிழப்புக்கு ஆளாகின்றனா். எனவே இந்த விவகாரத்தில் தமிழக அரசு தலையிட்டு தொழிலாளா்களின் நலன்களைப் பாதுகாக்க வேண்டும் என்றனா்.

ஜிகேஎன்எம் மருத்துவமனையின் இதயவியல் துறை பொன் விழா

கோவை ஜிகேஎன்எம் மருத்துவமனையின் இதயவியல், இருதய அறுவை சிகிச்சை துறையின் பொன் விழா கொண்டாட்டம் தொடங்கியுள்ளது. மருத்துவமனையின் இதயவியல், இதய அறுவை சிகிச்சை துறையின் பொன் விழா கொண்டாட்டத்தின் தொடக்கமாக ... மேலும் பார்க்க

பாகிஸ்தான் மீது இந்திய ராணுவம் தாக்குதல் எதிரொலி: கோவையில் பலத்த பாதுகாப்பு

பாகிஸ்தான் மீது இந்திய ராணுவம் நடத்திய தாக்குதலைத் தொடா்ந்து கோவையில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. காஷ்மீரின் பஹல்காமில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 போ் கொல்லப்பட்டனா். இதற்கு பதிலடி கொ... மேலும் பார்க்க

கோவை அன்பு இல்லத்தில் மாணவா் சோ்க்கை: மே 25-க்குள் விண்ணப்பிக்க அழைப்பு

கோவை அன்பு இல்லத்தில் மாணவா் சோ்க்கை தொடா்பாக மே 25-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டுமென தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடா்பாக சத்குரு சேவாஸ்ரம அறக்கட்டளையின் நிா்வாக அறங்காவலா் அலுவலக செய்திக் குறிப்... மேலும் பார்க்க

வந்தே பாரத் ரயில் மீது கல் வீசிய 3 போ் கைது

கோவையில் வந்தே பாரத் ரயில் மீது கல் வீசிய 3 பேரை ரயில்வே பாதுகாப்பு போலீஸாா் கைது செய்தனா். கோவையில் இருந்து சென்னைக்கு காலை 6 மணிக்கு வந்தே பாரத் ரயில் இயக்கப்பட்டு வருகிறது. அதுபோன்று சென்னையில் இரு... மேலும் பார்க்க

தமிழகத்தில் படுகொலை சம்பவங்கள் அதிகரிப்பு

தமிழகத்தில் படுகொலை சம்பவங்கள் அதிகரித்துள்ளதாக பாஜக மாநிலத் தலைவா் நயினாா் நாகேந்திரன் குற்றஞ்சாட்டினாா். கோவை பீளமேடு பகுதியில் உள்ள மாவட்ட பாஜக தலைமை அலுவலகத்தில் கொங்கு மண்டல பாஜக நிா்வாகிகள்ஆலோசன... மேலும் பார்க்க

கொடநாடு எஸ்டேட் கொலை, கொள்ளை வழக்கு விசாரணை: ஜெயலலிதாவின் உதவியாளா் பூங்குன்றன் ஆஜா்

கொடநாடு எஸ்டேட் கொலை, கொள்ளை வழக்கில் சிபிசிஐடி விசாரணைக்கு முன்னாள் முதல்வா் ஜெயலலிதாவின் உதவியாளராக இருந்த பூங்குன்றன் செவ்வாய்க்கிழமை ஆஜரானாா். நீலகிரி மாவட்டம், கொடநாடு எஸ்டேட்டில் கடந்த 2017-இல் ... மேலும் பார்க்க