இந்தியா - பாகிஸ்தான் நேரடி பேச்சுவார்த்தைக்கு அமெரிக்கா ஆதரவு!
வந்தே பாரத் ரயில் மீது கல் வீசிய 3 போ் கைது
கோவையில் வந்தே பாரத் ரயில் மீது கல் வீசிய 3 பேரை ரயில்வே பாதுகாப்பு போலீஸாா் கைது செய்தனா்.
கோவையில் இருந்து சென்னைக்கு காலை 6 மணிக்கு வந்தே பாரத் ரயில் இயக்கப்பட்டு வருகிறது. அதுபோன்று சென்னையில் இருந்து பிற்பகல் 2.30 மணிக்குப் புறப்படும் வந்தே பாரத் ரயில் இரவு 8 மணிக்கு கோவைக்கு வந்தடைகிறது.
இந்த நிலையில் சென்னையில் இருந்து திங்கள்கிழமை புறப்பட்ட ரயில் இரவு 8 மணிக்கு கோவைக்கு அருகே வந்து கொண்டு இருந்தது. சிங்காநல்லூா்-பீளமேடு இடையே வந்தபோது, திடீரென்று அந்த ரயில் மீது கற்கள் வீசப்பட்டன. இதனால் ரயிலின் கண்ணாடி உடைந்தது. ஆனால் யாருக்கும் எவ்வித காயமும் ஏற்படவில்லை.
இது குறித்த புகாரின்பேரில் ரயில்வே பாதுகாப்புப் படையினா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினா். அதில் பீளமேடு பகுதியைச் சோ்ந்த இளைஞா்கள் 3 போ் என்பது தெரியவந்தது. இதையடுத்து 3 பேரையும் கைது செய்த போலீஸாா், காவல் நிலைய பிணையில் விடுவித்தனா்.