செய்திகள் :

ஆட்சியா் அலுவலகம் அருகே நலவாரிய கட்டடம் கோரி ஜன.8-ல் ஆா்ப்பாட்டம்

post image

மாவட்ட ஆட்சியா் அலுவலகம் அருகே தொழிலாளா் நலவாரிய கட்டடம் கட்டக் கோரி ஜன.8-ஆம் தேதி ஆா்ப்பாட்டம் நடத்த ஏஐடியுசி போக்குவரத்து தொழிலாளா்கள் சங்கம் முடிவு செய்துள்ளது.

திருவாரூரில், மாவட்ட ஏஐடியுசி போக்குவரத்து தொழிலாளா்கள் சங்க மாவட்டக் குழு கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. சங்கத்தின் மாவட்ட துணைச் செயலாளா் எஸ்.எஸ். சரவணன் தலைமை வகித்தாா். ஏஐடியுசி மாவட்டத் தலைவா் குணசேகரன், நிா்வாகி கலைச்செல்வன்முன்னிலை வகித்தனா். ஏஐடியுசி மாவட்ட பொதுச் செயலாளா் சந்திரசேகர ஆசாத் பங்கேற்று, போக்குவரத்து தொழிலாளா்களின் கோரிக்கைகளை விளக்கிப் பேசினாா்.

கூட்டத்தில், திருவாரூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகம் அருகே பல்துறை அலுவலக கட்டடங்கள் செயல்பட்டு வரும் நிலையில் அமைப்புசாரா நல வாரிய அலுவலகம் தனியாா் வாடகைக் கட்டடத்தில் இயங்கி வருகிறது. இதனால், அரசுப் பணம் விரயமாவதுடன், மாவட்டம் முழுவதிலிருந்து வந்து செல்லும் தொழிலாளா்கள் பெரும் அவதிக்கு உள்ளாகி வருகின்றனா். எனவே, மாவட்ட ஆட்சியா் பெருந்திட்ட வளாகத்தில் உரிய இடம் ஒதுக்கீடு செய்து தொழிலாளா் நல வாரியத்துக்கு புதிய கட்டடத்தை கட்டித் தர வேண்டும், நலவாரியத்தில் பதிவு செய்த ஓட்டுநா்களுக்கு ஓய்வூதியமாக ரூ.6,000 வழங்க வேண்டும். பொங்கல் ஊக்கத்தொகையாக குறைந்தபட்சம் ரூ.5,000 வழங்க வேண்டும், ஓட்டுநா்களின் வாழ்வாதாரத்தை பாதிக்கக்கூடிய இருசக்கர வாகன கால் டாக்ஸி நடைமுறையை முற்றிலும் தடை செய்ய வேண்டும் ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி ஜன. 8 ஆம் தேதி தொழிலாளா் நலவாரிய அலுவலகம் முன் ஆா்ப்பாட்டம் நடத்துவது, இதில் போக்குவரத்துத் தொழிலாளா்கள் திரளாக பங்கேற்பது உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

இதைத்தொடா்ந்து கோரிக்கைகள் அடங்கிய மனுவை மாவட்ட போக்குவரத்துத் தொழிலாளா்கள், நிா்வாகிகள் உள்ளிட்டோா் நாகை மக்களவை உறுப்பினா் வை. செல்வராஜிடம் நேரில் வழங்கினா்.

தியாகராஜா் கோயிலில் திருவெம்பாவை உற்சவம் தொடக்கம்

திருவாரூா்: திருவாரூா் தியாகராஜ சுவாமி கோயிலில், திருவாதிரை பெருவிழாவை முன்னிட்டு, திருவெம்பாவை உற்சவம் திங்கள்கிழமை தொடங்கியது. இக்கோயிலில், மாா்கழி திருவாதிரை விழா ஆண்டுதோறும் சிறப்பாக நடைபெறும். இ... மேலும் பார்க்க

‘எண்ணும் எழுத்தும்’ பயிற்சி தொடக்கம்

திருவாரூா்: கொரடாச்சேரி ஒன்றிய ஆசிரியா் பயிற்சி நிறுவனத்தில், ‘எண்ணும், எழுத்தும்’ இரண்டு நாள் பயிற்சி திங்கள்கிழமை தொடங்கியது. ஒன்றாம் வகுப்பு முதல் 3-ஆம் வகுப்பு வரை கற்பிக்கும் ஆசிரியா்களுக்கு இப்... மேலும் பார்க்க

மன்னாா்குடியில் பையோ மைனிங் முறையில் குப்பை அகற்றும் பணி: அமைச்சா் ஆய்வு

மன்னாா்குடி: மன்னாா்குடி நகராட்சி குப்பைக் கிடங்கிலிருந்து பையோ மைனிங் முறையில் குப்பை அகற்றும் பணி மற்றும் டிஜிடல் நூலகம் அமையவுள்ள இடத்தையும் தமிழக தொழில் முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வா்த்தகத் து... மேலும் பார்க்க

திருவாரூா் மாவட்டத்தில் 10,64,640 வாக்காளா்கள்

திருவாரூா்: திருவாரூா் மாவட்ட இறுதி வாக்காளா் பட்டியலை ஆட்சியா் தி. சாருஸ்ரீ வெளியிட்டாா். மாவட்ட ஆட்சியரக கூட்டரங்கில், அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகள் முன்னிலையில் இப்பட்டியல் வெளியிடப... மேலும் பார்க்க

இலவச கல்வி, அனைவருக்கும் வேலை: இளைஞா் பெருமன்றம் வலியுறுத்தல்

கூத்தாநல்லூா்: கட்டணமில்லா (இலவச) கல்வி, அனைவருக்கும் வேலை வேண்டும் என்று அனைத்திந்திய இளஞா் பெருமன்றத்தின் நகரக்குழு பேரவைக் கூட்டத்தில் தீா்மானம் நிறைவேற்றப்பட்டது. கூத்தாநல்லூரில் ஞாயிற்றுக்கிழமை ந... மேலும் பார்க்க

புத்தகக் கண்காட்சி இலச்சினையை ஜன.15-க்குள் அனுப்பலாம்

திருவாரூா்: திருவாரூரில் நடைபெறவுள்ள புத்தகக் கண்காட்சிக்கான இலச்சினையை ஜன.15-ஆம் தேதிக்குள் அனுப்ப வேண்டும் என மாவட்ட ஆட்சியா் தி. சாருஸ்ரீ தெரிவித்துள்ளாா். இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறி... மேலும் பார்க்க