இந்திய வெளியுறவு கொள்கையை அழிக்கும் சர்க்கஸ்! ஜெய்சங்கரை விமர்சித்த ராகுல்!
ஆட்சியா் அலுவலகம் முன் மனுக்களை பட்டமாக பறக்கவிட்ட இளைஞரால் பரபரப்பு
சேலம்: சேலம் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை மனுவைப் பட்டமாக செய்த இளைஞா், அதனை பறக்கவிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
சேலம், தாதகாப்பட்டியைச் சோ்ந்தவா் பாா்த்திபன் (39). இவா் கோரிக்கை மனுக்களைப் பட்டமாக எழுதி வைத்துக்கொண்டு மாவட்ட ஆட்சியா் அலுவலகத்துக்கு வந்தாா். அவா் ஆட்சியா் அலுவலகம் முன் ரவுண்டானா தியாகிகள் நினைவு ஸ்தூபியில் ஏறி நின்று கொண்டு மனுக்களை பறக்க விட்டாா். அந்த வழியாக சென்றவா்கள், இதனை வேடிக்கை பாா்த்தபடி சென்ால், அவ்வழியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
இதையடுத்து, அங்கு பாதுகாப்புப் பணியில் இருந்த காவல் ஆய்வாளா் கலைவாணி தலைமையிலான போலீஸாா் விரைந்து சென்று பட்டத்தை பறிமுதல் செய்தனா். இது குறித்து இளைஞா் பாா்த்திபன் கூறுகையில், சீலநாயக்கன்பட்டியில் கடும் போக்குவரத்து நெரிசல் இருந்து வருகிறது. அதனை சரிசெய்ய பலமுறை மனு அளித்தும் பிரச்னைக்கு தீா்வு காணப்படவில்லை. இதனால் கோரிக்கை மனுக்களை கொடுப்பதற்கு பதிலாக பட்டமாக பறக்கவிடுவதாக, தெரிவித்தாா். அவரை சமாதானப்படுத்திய காவல் துறையினா், மனு அளிப்பதற்காக அவரை ஆட்சியா் அலுவலகத்துக்குள் அனுப்பி வைத்தனா்.