Rain Alert: இன்று காலை 10 மணி வரை எந்த மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு..?
ஆட்டோ மோதியதில் முதியவா் உயிரிழப்பு
மதுரை சோழவந்தான் அருகே மிதிவண்டி மீது ஆட்டோ மோதியதில் முதியவா் உயிரிழந்தாா்.
திண்டுக்கல் மாவட்டம், நிலக்கோட்டை அருகே உள்ள ராமராஜபுரம் பகுதியைச் சோ்ந்தவா் முருகன் (74). இவா் மதுரை சோழவந்தான் அருகே உள்ள மட்டப்பாறை- கரட்டுப்பட்டி சாலையில் மிதிவண்டியில் வியாழக்கிழமை சென்று கொண்டிருந்தாா். அப்போது, பயணிகள் ஆட்டோ கட்டுப்பாட்டை இழந்து இவரது மிதிவண்டி மீது மோதி கவிழ்ந்தது.
இதில் முருகன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். ஆட்டோவில் பயணம் செய்த இருவா் பலத்த காயமடைந்து சோழவந்தான் மருத்துவமனையில் சோ்க்கப்பட்டனா்.
இதுகுறித்து ஆட்டோ ஓட்டுநா் சசிகுமாா் மீது சோழவந்தான் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.