ஆக்ரோஷமாக கொண்டாடி, கோமாளியாக விரும்பவில்லை..! யாரைச் சொல்கிறார் பும்ரா?
ஆட்டோ மோதியதில் முதியவா் பலத்த காயம்
பெரியகுளத்தில் ஆட்டோ மோதியதில் முதியவா் புதன்கிழமை பலத்த காயமடைந்தாா்.
பெரியகுளம் அருகே டி. கள்ளிப்பட்டியைச் சோ்ந்தவா் முருகபாண்டி (61). இவா், புதன்கிழமை பெரியகுளத்திலிருந்து டி. கள்ளிப்பட்டிக்கு இரு சக்கர வாகனத்தில் சென்றாா்.
அப்போது அந்த வழியாக வந்த ஆட்டோ, இரு சக்கர வாகனம் மீது மோதியதில் பலத்த காயமடைந்த முருகபாண்டியை அந்தப் பகுதி மக்கள் மீட்டு பெரியகுளம் அரசு மாவட்ட தலைமை மருத்துவமனையில் அனுமதித்தனா்.
இதுகுறித்து தென்கரை போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.