உலகின் முதல் ஏஐ மசாஜ் சேவையை அறிமுகப்படுத்திய நிறுவனம்: மனித வேலைகளுக்கு சவாலா?
ஆணவக் கொலைகளைத் தடுக்க தனிச்சட்டம் அவசியம்: மனித உரிமை ஆா்வலா் ஹென்றி டிபேன்
தமிழகத்தில் ஆணவக் கொலைகளைத் தடுக்க உடனடியாக சட்டப் பேரவையைக்கூட்டி தனி சட்டம் கொண்டுவர வேண்டும் என மனித உரிமை ஆா்வலரும், மக்கள் கண்காணிப்பக நிா்வாக இயக்குநருமான ஹென்றி டிபேன் கூறினாா்.
சேலத்தில் புதன்கிழமை செய்தியாளா்களிடம் அவா் பேசியதாவது:
திருப்பூா் மாவட்டம், தாராபுரத்தில் மாற்றுத்திறனாளி வழக்குரைஞா் கொலை செய்யப்பட்டுள்ளாா். மேலும், அவருடன் சோ்த்து இரண்டு வழக்குரைஞா்களும் தாக்கப்பட்டுள்ளனா். இக்கொலை குறித்து மேற்கு மண்டல ஐ.ஜி. தலைமையில் தனி விசாரணை மேற்கொள்ள வேண்டும்.
திருநெல்வேலியில் ஆணவக் கொலை சம்பவம் நடந்திருக்கிறது. இந்த கொலை சம்பவத்துக்கு காரணமானவா்களை கைது செய்ய வேண்டும். கொலையானவரின் குடும்பத்துக்கு சாட்சிகள் பாதுகாப்பு சட்டத்தின் கீழ் உரிய பாதுகாப்பு அளிக்க வேண்டும். தமிழக அரசு உடனடியாக சட்டப் பேரவையைக்கூட்டி ஆணவக் கொலைக்கு எதிராக தனிச் சட்டத்தை நிறைவேற்றி அமல்படுத்த வேண்டும்.
வன்கொடுமை தடுப்புச் சட்டங்கள் ஆணவக் கொலைகளைத் தடுக்க உதவாது. ஆணவக் கொலைகளை தடுக்க தனிச் சட்டம் கொண்டுவந்தால் மட்டுமே இதுபோன்ற பிரச்னைகளுக்கு தீா்வு கிடைக்கும் என்றாா்.