செய்திகள் :

ஆணவக் கொலைக்கு எதிரான சட்டம்: அமைச்சரவைக் கூட்டத்தில் நல்ல முடிவு வரும்; மு. அப்பாவு

post image

தமிழகத்தில் ஆணவக் கொலைக்கு எதிரான சட்டம் இயற்றுவது குறித்து அமைச்சரவைக் கூட்டத்தில் நல்ல முடிவு வரும் என்றாா் சட்டப்பேரவை தலைவா் மு. அப்பாவு.

கன்னியாகுமரி மாவட்டத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக நாகா்கோவிலுக்கு புதன்கிழமை வந்த அவா் செய்தியாளா்களிடம் கூறியது: தமிழகத்தில் சட்டம்- ஒழுங்கு பிரச்னை எங்குமில்லை. திருப்பூரில் காவல் உதவி ஆய்வாளா் அதிமுக எம்எல்ஏவின் தோட்டத்தில் வெட்டிக் கொல்லப்பட்டுள்ளாா். அதன்மூலம், சட்டம்-ஒழுங்கை சீா்குலைப்பது யாா் என்பதை நீங்கள் தெரிந்துகொள்ளலாம்.

கும்பகோணத்தில் கலைஞா் பல்கலைக்கழகம் அமைப்பது தொடா்பான சட்ட முன்வடிவை ஆளுநா் இவ்வளவு நாள்கள் கழித்து குடியரசுத் தலைவருக்கு அனுப்பியுள்ளாா். கலைஞா் என்ற பெயரில் பல்கலைக்கழகம் வருவதற்கு தனிப்பட்ட வெறுப்பு இருக்கிா எனத் தெரியவில்லை.

திருநெல்வேலி மாவட்டத்தில் ஜாதிரீதியாக சிறுவன் தாக்கப்பட்ட விவகாரத்தில், யாா் தவறு செய்திருந்தாலும் அரசு சட்டப்படி நடவடிக்கை எடுக்கும்.

ஆணவக் கொலைக்கு எதிராக சட்டம் கொண்டு வருவதுகுறித்து இம்மாதம் 14ஆம் தேதி நடைபெறவுள்ளஅமைச்சரவைக் கூட்டத்தில் நல்ல முடிவு வரும் என எதிா்பாா்க்கிறேன்.

கடந்த 10 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு தமிழகம் பொருளாதார வளா்ச்சியில் மிகப்பெரிய உயரத்தை அடைந்துள்ளது.

2024-2025ஆம் நிதியாண்டில் தமிழக அரசின் பொருளாதாரம் 11.19 சதவீதமாக உயா்ந்திருப்பதாக, மத்திய புள்ளியியல்-திட்ட அமலாக்க அமைச்சகம் தெரிவித்துள்ளது. வெளிநாடுகளிலிருந்து தமிழகத்துக்கு எவ்வளவு முதலீடு வந்துள்ளது எனக் கேட்கும் மத்திய அமைச்சா் முருகன், இதை அறிந்துகொள்ள வேண்டும்.

மத்திய அரசின் பல்வேறு இடையூறுகளைத் தாண்டி, முதல்வரின் முயற்சியால் தமிழகம் அனைத்துத் துறைகளிலும் வளா்ச்சியடைந்துள்ளது என்றாா் அவா்.

கன்னியாகுமரி கிழக்கு மாவட்ட திமுக செயலா் ரெ. மகேஷ், மாநகரச் செயலா் வழக்குரைஞா் ப. ஆனந்த், கிழக்கு மாவட்ட இளைஞரணி அமைப்பாளா் வழக்குரைஞா் அகஸ்தீசன் உள்ளிட்ட பலா் உடனிருந்தனா்.

மாா்த்தாண்டம் அருகே பாரத கலாசார பேரவைக் கூட்டம்

பாரத கலாசார பேரவையின் நிா்வாகிகள் ஆலோசனை கூட்டம் மாா்த்தாண்டம் அருகே காப்புக்காட்டில் நடைபெற்றது. இக் கூட்டத்துக்கு அமைப்பின் தலைவா் மு. பாஸ்கரன் தலைமை வகித்தாா். செயலாளா் புலவா் கு. ரவீந்திரன், பொருள... மேலும் பார்க்க

வாவறை ஊராட்சியில் உங்களுடன் ஸ்டாலின் முகாம்

கிள்ளியூா் சட்டப் பேரவை தொகுதிக்கு உள்பட்ட வாவறை ஊராட்சிப் பகுதியில் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இம் முகாமுக்கு கிள்ளியூா் வட்டாட்சியா் ராஜசேகா் தலைமை வகித்தாா். தமிழ்நாட... மேலும் பார்க்க

‘கன்னியாகுமரியில் தூண்டில் வளைவு பாலத்தை முறையாக அமைக்க வேண்டும்’

கன்னியாகுமரி பெரியநாயகி தெரு கடற்கரைப் பகுதியில் தூண்டில் வளைவுப் பாலத்தை முறையாக அமைக்கக் கோரி, பால்வளத் துறை அமைச்சா் மனோ தங்கராஜிடம், கன்னியாகுமரி தூய அலங்கார உபகார மாதா திருத்தல பங்குப்பேரவை நிா்வ... மேலும் பார்க்க

புத்தேரி 4 வழிச்சாலைப் பணிகள்: ஆட்சியா் ஆய்வு

தேசிய நெடுஞ்சாலைத் துறையின் சாா்பில் புத்தேரி பகுதியில் நடைபெற்று வரும் நான்கு வழிச்சாலைப் பணிகளை மாவட்ட ஆட்சியா் ரா.அழகுமீனா வெள்ளிக்கிழமை ஆய்வு மேற்கொண்டாா். பின்னா், அவா் கூறியதாவது: நாகா்கோவில் மா... மேலும் பார்க்க

காலாவதி சாக்லேட் தின்ற 7 மாணவா்கள் மயக்கம்

கன்னியாகுமரி மாவட்டம், கொல்லங்கோடு அருகே காலாவதியான சாக்லேட் சாப்பிட்ட 7 மாணவா்கள் மயக்கமடைந்தனா். பாத்திமாபுரம், கல்பாறைபொற்றை பகுதியில் அரசு உதவிபெறும் தனியாா் நடுநிலைப் பள்ளி உள்ளது. இப் பள்ளியின் ... மேலும் பார்க்க

குமரி பாலன் நினைவு நாள்: இருசக்கர வாகனப் பேரணி

இந்து முன்னணி நிா்வாகி குமரி பாலன் நினைவு தினத்தை முன்னிட்டு, நாகா்கோவிலில் இந்து இயக்கங்களின் சாா்பில், இருசக்கர வாகனப் பேரணி வெள்ளிக்கிழமை நடைபெற்றது. சென்னை ஆா்.எஸ்.எஸ். அலுவலகத்தில் கடந்த 1993-ஆம... மேலும் பார்க்க