செய்திகள் :

காந்தா முதல் பாடல் வெளியானது!

post image

நடிகர் துல்கர் சல்மானின் ”காந்தா” திரைப்படத்தின் முதல் பாடலான “பனிமலரே” வெளியாகியுள்ளது.

தென்னிந்திய திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வரும், நடிகர் துல்கர் சல்மான், வித்தியாசமான வேடங்களில் தொடர்ந்து நடித்து வருவதன் மூலம் ரசிகர்களிடையே தனி கவனம் பெற்றுள்ளார்.

இந்நிலையில், இயக்குநர் செல்வமணி செல்வராஜ் இயக்கத்தில், துல்கர் சல்மானின் நடிப்பில் உருவாகி வரும் “காந்தா” திரைப்படம் வரும் செப்டம்பர் மாதம் திரைக்கு வருகின்றது.

இந்தப் படத்தின் டீசர் வெளியான நாள் முதலே ரசிகர்களின் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ள நிலையில், தமிழ் சினிமாவின் முதல் சூப்பர்ஸ்டாரான தியாகராஜ பாகவதரின் வாழ்க்கையை மையமாகக் கொண்டு இப்படம் உருவாகி வருவதாகக் கூறப்படுகிறது.

இந்நிலையில், இந்தப் படத்தின் முதல் பாடலான “பனிமலரே” இன்று (ஆக.9) மாலை படக்குழுவினரால் வெளியிடப்பட்டுள்ளது. இசையமைப்பாளர் ஜானு சந்தர் இசையில், பாடகர் பிரதீப் குமார், பாடகி பிரியங்கா ஆகியோரது குரலில் உருவாகியுள்ள இப்பாடலின் வரிகளை குட்டி ரேவதி எழுதியுள்ளார்.

வரும் செப்டம்பர் 12 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகும், காந்தா திரைப்படத்தில், நடிகர்கள் ராணா டகுபதி, சமுத்திரகனி, நடிகை பாக்யஸ்ரீ போஸ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிக்க: கேப்டன் பிரபாகரன் மறுவெளியீட்டு டிரைலர்!

பஞ்சாப் எஃப்சியை வீழ்த்தியது போடோலாந்து

டுரண்ட் கோப்பை கால்பந்து போட்டியில் பலம் வாய்ந்த பஞ்சாப் எஃப்சி அணியை 1-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தியது போடோலாந்து அணி. 134-ஆவது டுரண்ட் கோப்பை கால்பந்து போட்டிகள் பல்வேறு பகுதிகளில் நடைபெற்று வருகிற... மேலும் பார்க்க

வீட்டுக்குப் போனதும் நான் கால்ல விழுகணும்! வைரலாகும் அஜித் - ஷாலினி!

நடிகர் அஜித் - ஷாலினி இணையின் புதிய விடியோ இணையத்தைக் கலக்கி வருகிறது. குட் பேட் அக்லியின் பிரம்மாண்ட வெற்றியைத் தொடர்ந்து நடிகர் அஜித் குமார் கார் பந்தயங்களில் பங்கேற்பதற்கான பயிற்சிகளில் ஈடுபட்டுள்ள... மேலும் பார்க்க

ஏகே - 64 படத்தின் வில்லன் இவர்தானாம்!

நடிகர் அஜித் குமாரின் 64-வது திரைப்படம் குறித்து தகவல்கள் வெளியாகியுள்ளன.இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் நடிகர் அஜித் குமார் கூட்டணியில் உருவான குட் பேட் அக்லி திரைப்படம் மிகப்பெரிய வெற்றிப்படமாக அமைந்த... மேலும் பார்க்க

ஷங்கர் மகனுக்கு ஜோடியாகும் நடிகை இவரா?

இயக்குநர் ஷங்கர் மகன் கதாநாயகனாகும் படத்தின் நாயகி குறித்து தகவல் வெளியாகியுள்ளது.ஷங்கரின் மகன் அர்ஜித் இயக்குநராகும் விருப்பத்தில் இருந்ததால் அவரை ஏ. ஆர். முருகதாஸிடம் உதவி இயக்குநராக ஷங்கர் சேர்த்து... மேலும் பார்க்க