செய்திகள் :

"ஆதார் இல்லாமல் வங்கிக் கணக்கை இயக்க இயலாதென எங்கு கூறப்பட்டிருக்கிறது?" - உச்ச நீதிமன்றம் கேள்வி!

post image

வங்கிக் கணக்கோடு ஆதார் இணைக்காததைக் காரணம் காட்டி, 5,097 தொழிலாளர்களுக்கு வழங்க வேண்டிய வாழ்வாதார இழப்பீட்டை ரத்து செய்தது டெல்லி அரசு. டெல்லி அரசின் இந்த நடவடிக்கை குறித்து கருத்து தெரிவித்த உச்ச நீதிமன்றம், "ஆதார் இல்லாமல் வங்கிக் கணக்கை இயக்கவே இயலாது என எந்தச் சட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது?" எனக் கேள்வி எழுப்பியுள்ளது. 

அபே ஓகா மற்றும் உஞ்சல் புயன் ஆகிய உச்ச நீதிமன்ற நீதிபதிகள் அடங்கிய அமர்வு முன்னிலையில், டெல்லி காற்று மாசு குறித்த 'எம். சி மேத்தா Vs மத்திய அரசு' என்ற வழக்கு கடந்த புதனன்று விசாரணைக்கு வந்தது. விசாரணையின்போது, GRAP திட்டத்தால் பாதிக்கப்பட்ட தொழிலாளர்களுக்கு வழங்கப்பட்ட வாழ்வாதார இழப்பீடு தொடர்பான வாக்குமூலத்தை டெல்லி அரசு சமர்ப்பித்தது. டெல்லி அரசு சார்பில் சமர்ப்பிக்கப்பட்ட வாக்குமூலத்தில், ஆதாரை வங்கிக் கணக்கோடு இணைக்காத தொழிலாளர்களுக்கு இழப்பீடு வழங்கவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டு இருந்தது.

ஆதார்

இது குறித்து கேள்வி எழுப்பிய நீதிபதி அபே ஓகா, "எந்தச் சட்டத்தில் ஆதார் இல்லாமல் வங்கிக் கணக்கை இயக்க இயலாது எனக் குறிப்பிடப்பட்டுள்ளது?" எனக் கேள்வி எழுப்பினார். மற்றும் இது குறித்து அடுத்த நீதிமன்ற அமர்வில் விவாதிக்கப்படும் எனவும் உத்தரவிட்டார். 

டெல்லி சுற்றுச்சூழல் துறையின் செயலாளர், டெல்லி கட்டடங்கள் மற்றும் பிற கட்டட தொழிலாளிகள் நல வாரிய செயலாளர் ஆகியோர் இணைந்து சமர்ப்பித்த வாக்குமூலத்தில், பாதிக்கப்பட்ட தொழிலாளர் ஒவ்வொருவருக்கும் ரூ. 8,000 வாழ்வாதார இழப்பீடாக வழங்க தீர்மானிக்கப்பட்டது  எனவும், மொத்தமாக 93,272 பாதிக்கப்பட்ட தொழிலாளர்களுக்கு ரூ. 74,61,76,000 இழப்பீடாக வழங்க 3 டிசம்பர் 2024 அன்று நடத்திய கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது எனவும் குறிப்பிடப்பட்டு இருந்தது. 

மேலும், டெல்லி அரசு சமர்ப்பித்த வாக்குமூலத்தில், "ஆதார் இணைக்கப்பட்ட வங்கிக் கணக்குகளுக்கு மட்டுமே இழப்பீடு வழங்கப்படும். பல முறை தொழிலாளர்களிடம் ஆதாரை வங்கிக் கணக்கோடு இணைப்பது குறித்து குறுஞ்செய்திகள் மூலம் தெரிவித்தோம். மார்ச் 25, 2025 வரை 5,907 தொழிலாளர்கள் ஆதாரை வங்கிக் கணக்கோடு இணைக்காததால் அவர்களுக்கு இழப்பீடு வழங்க இயலவில்லை. கட்டட வேலைகளோடு தொடர்புடைய 15 அரசாங்க துறைகளிடம் பாதிக்கப்பட்ட தொழிலாளர்கள் தொடர்பான விவரங்களை கேட்டோம். ஆறு துறையிலிருந்து மட்டுமே பதில் கிடைத்தது.

உச்ச நீதிமன்றம்

மேலும், மாவட்டத்தின் தொழிலாளர் நல அதிகாரிகளிடம் பாதிக்கப்பட்ட தொழிலாளர்கள் குறித்த விவரங்கள் சேகரிக்க முயன்றோம். அதன் மூலம் 505 தொழிலாளர்களின் விவரங்கள் மட்டுமே கிடைத்தது. 36 தொழிற்சங்கங்களிடம் பாதிக்கப்பட்ட தொழிலாளர்களது விவரங்களை கேட்டோம். 3 தொழிற்சங்கங்கள் மட்டுமே 82 தொழிலாளர்களின் விவரங்களை பகிர்ந்தன. அதில் 14 தொழிலாளர்களே இழப்பீடு பெற தகுதியானவர்கள். இழப்பீடு பெற தகுதி வாய்ந்த தொழிலாளர்களுக்கு 2025 மார்ச் 25 மற்றும் மார்ச் 27 அன்று இழப்பீடு வழங்கப்பட்டது" எனக் குறிப்பிடப்பட்டு இருந்தது. 

உச்ச நீதிமன்றம் தீர்ப்பு: ``ஆளுநரின் எதேச்சதிகாரப் போக்கிற்குச் சம்மட்டி அடி!'' - த.வெ.க அறிக்கை

தமிழ்நாடு சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட 10-க்கும் மேற்பட்ட மசோதாக்களுக்கு ஆளுநர் ஆர்.என். ரவி ஒப்புதல் அளிக்காமல் கிடப்பில் போட்டிருந்ததை எதிர்த்து தமிழ்நாடு அரசு சார்பில் உச்ச நீதிமன்றத்தில் ரிட் மன... மேலும் பார்க்க

`வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்ப்பு; தமிழ்நாடு போராடும்,வெல்லும்’ - சட்டப்பேரவையில் உற்சாகமான ஸ்டாலின்

தமிழ்நாடு சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டு அனுப்பப்படும் மசோதாக்களுக்கு ஆளுநர் ஒப்புதல் அளிப்பதில்லை என்றும் பல்கலைக்கழக துணைவேந்தர்கள் விவகாரத்தில் ஆளுநர் இடையூறு செய்வதாகவும் தமிழக அரசு உச்ச நீதிமன்... மேலும் பார்க்க

Waqf: இந்தியாவில் முதல் மாநிலமாக வக்ஃபு சட்டத்தை பயன்படுத்தும் கேரளா; எதிர்க்கும் தமிழ்நாடு!

நாடாளுமன்றத்தில், எதிர்க்கட்சிகளின் கடும் எதிர்ப்புகளுக்கு மத்தியில் வக்ஃப் திருத்த மசோதா 2025-ஐ பாஜக கூட்டணி அரசு நிறைவேற்றியிருந்தது. இந்த விவகாரத்தில், `சிறுபான்மையினரின் மத சுதந்திரத்தில் பாஜக அரச... மேலும் பார்க்க

"சென்னை பத்திரிகையாளர் மன்ற உட்கட்டமைப்பு வசதிக்காக ரூ.2.5 கோடி ஒதுக்கீடு" - உதயநிதி அறிவிப்பு

இந்தியன் ஆயில் நிறுவனமும், சென்னை பத்திரிக்கையாளர் மன்றமும் இணைந்து பத்திரிகையாளர்களுக்கு கிரிக்கெட் போட்டித் தொடரை நடத்தி முடித்திருக்கிறது. முன்னதாக, இத்தொடருக்கான அறிவிப்பில், சாம்பியன் பட்டம் வெல்... மேலும் பார்க்க

Modi: `காங்கிரஸை விட அதிகமான நிதியை தமிழ்நாட்டிற்கு தந்திருக்கிறோம்' - பிரதமர் மோடி உரை

இலங்கை விசிட்டை முடித்துவிட்டு, அங்கிருந்து இன்று மதியம் 12.40 மணியளவில் ஹெலிகாப்டர் மூலம் ராமேஸ்வரம் வந்தார் பிரதமர் மோடி. தமிழக அரசு சார்பில் மோடியை வரவேற்ற ஆளுநர் ரவி, கம்பராமணம் புத்தகத்தைப் பரிசா... மேலும் பார்க்க

ராஜபாளையம்: இரண்டு நாளில் 80 பேரைக் கடித்த தெருநாய்கள்- பொதுமக்கள் அச்சம்

ராஜபாளையம் நகராட்சியில் தெரு நாய்கள் தொல்லையால் பெண்கள் மற்றும் பொதுமக்கள் பெரும் பாதிப்புக்குள்ளாகி வருகின்றனர். சிகிச்சைக்கு வந்தவர்கள்எனவே, ராஜபாளையம் சுற்றுவட்டாரத்தில் தெரு நாய்களைக் கட்டுப்படுத்... மேலும் பார்க்க