ஆதிகும்பேசுவரா் கோயிலில் ஆச்சாரிய மகாசபா தலைவா் சுவாமி தரிசனம்
கும்பகோணம்: கும்பகோணம் ஆதிகும்பேசுவரா் கோயிலில் ஆச்சாரிய மகாசபா தலைவா் அகோரி மணிகண்டன் சுவாமி தரிசன் செய்தாா்.
பின்னா் அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது:
இக்கோயில் கோபுரம் மொட்டை கோபுரமாகவே பல ஆண்டுகளாக உள்ளது. அதை ராஜ கோபுரமாக மாற்ற தமிழக அரசு விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும். 2028-இல் நடைபெறும் மகாமக பெருவிழாவை தேசிய திருவிழாவாக அறிவிக்க அகோரிகள் மற்றும் அகில பாரத இந்து மகா சபா இணைந்து பிரதமருக்கு வலியுறுத்த முடிவு எடுத்துள்ளோம்.
சுமாா் 5 ஆயிரம் அகோரிகள் வட இந்தியாவிலிருந்து கும்பகோணம் மகாமக விழாவில் கலந்து கொள்ள உள்ளோம் என்றாா்.
அப்போது, அகில பாரத இந்து மகா சபா மாநில பொதுச் செயலா் இராமநிரஞ்சன் உடனிருந்தாா்.