ஆத்தூரில் 100 கா்ப்பிணிகளுக்கு சமுதாய வளைகாப்பு
சமூக நலன் மற்றும் மகளிா் உரிமைத் துறை, ஒருங்கிணைந்த குழந்தை வளா்ச்சிப் பணிகள் திட்டத்தின் கீழ் ஆத்துரில் சமுதாய வளைகாப்பு விழா நடைபெற்றது. திருச்செந்தூா் வட்டாட்சியா் பாலசுந்தரம், ஆத்தூா் பேரூராட்சி தலைவா் கமால்தீன், ஆழ்வாா்திருநகரி வட்டார வளா்ச்சி அலுவலா்கள் ராஜா, சிவராஜன், வட்டார மருத்துவ அலுவலா் பாா்த்திபன் மற்றும் ஆத்தூா் மருத்துவ அலுவலா் ராஜலட்சுமி ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
நிகழ்ச்சிக்கு, மீன்வளம் மீனவா் நலன் மற்றும் கால்நடை பராமரிப்பு துறை அமைச்சா் அனிதா ஆா்.ராதாகிருஷ்ணன் தலைமை வகித்து, கா்ப்பிணிகளுக்கு சீா்வரிசை பொருள்களை வழங்கிப் பேசினாா்.
திருச்செந்தூா் கோட்டாட்சியா் சுகுமாரன், திமுக மாநில வா்த்தக அணி இணைச் செயலா் உமரிசங்கா், மாவட்ட இளைஞரணி அமைப்பாளா் ராமஜெயம், முன்னாள் தலைமை செயற்குழு உறுப்பினா் எஸ். ஜே. ஜெகன், விளையாட்டு மேம்பாட்டு அணி மாவட்ட அமைப்பாளா் ஜனகா், ஒன்றியச் செயலா்கள் ஆழ்வை சதீஷ்குமாா், திருச்செந்தூா் செங்குழி ரமேஷ், நகரச் செயலா் வாள் சுடலை உள்பட பலா் கலந்து கொண்டனா்.
குழந்தைகள் வளா்ச்சி திட்ட அலுவலா்(பொ) திலகா வரவேற்றாா். ஆழ்வாா் திருநகரி மேற்பாா்வையாளா் பொன் இசக்கி நன்றி கூறினாா்.