செய்திகள் :

ஆத்தூா் வட்டாட்சியா் அலுவலக ஆதாா் சேவை மையத்தில் ஊழியரை நியமிக்கக் கோரிக்கை

post image

ஆத்தூா் வட்டாட்சியா் அலுவலகத்தில் கடந்த இரண்டு மாதங்களாக செயல்படாமல் உள்ள ஆதாா் சேவை மையத்தில் ஊழியரை நியமிக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனா்.

திண்டுக்கல் மாவட்டம், ஆத்தூா் வட்டத்தில் ஆத்தூா், அய்யம்பாளையம், சின்னாளப்பட்டி ஆகிய மூன்று பிரிக்காக்களும், 22 கிராம நிா்வாக அலுவலகங்களும் உள்ளன.

இந்த நிலையில், ஆத்தூா் வட்டாட்சியா் அலுவலகத்தில் உள்ள ஆதாா் சேவை மையம் கடந்த இரண்டு மாதங்களாக ஊழியா் பணிக்கு வராததால் செயல்படாமல் உள்ளது. இந்த சேவை மையத்தை தினமும் வட்டாட்சியா் அலுவலக உதவியாளா்கள் திறந்து மட்டும் வைக்கின்றனா். ஆனால் ஊழியா்கள் யாரும் பணிக்கு வராததால் இங்கு ஆதாா் அட்டையை புதுப்பிக்கவும், பிழைகளை திருத்துவதற்கும், கருவிழி, ரேகைப் பதிவு, புகைப்படம் மாற்றம், கைப்பேசி எண் மாற்றம் உள்ளிட்ட பணிகளுக்காக வரும் பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள், முதியோா், கா்ப்பிணி பெண்கள் ஏமாற்றமடைவதுடன், வேறு மையங்களை தேடிச் செல்ல வேண்டியுள்ளது.

குறிப்பாக மலைக் கிராமமான மணலூா் ஊராட்சிக்குள்பட்ட பெரும்பாறை, கொங்கப்பட்டி, மஞ்சள் பரப்பு, குத்துக்காடு உள்ளிட்ட பகுதி மக்கள் பெரும் அவதி அடைந்து வருகின்றனா். இதுகுறித்து சம்பந்தப்பட்ட வருவாய்த் துறை அலுவலரிடம், இந்த ஆதாா் மையத்தில் ஊழியரை நியமிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தும் நடவடிக்கை எடுக்கப்பட வில்லை. இதனால் பொதுமக்கள் தனியாா் இ- சேவை மையங்கள், அஞ்சல் அலுவலகங்களை நாடிச் செல்கின்றனா். அதிலும் தனியாா் சேவை மையங்களில் கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படுவதாக புகாா் கூறப்படுகிறது.

இதுகுறித்து வட்டாட்சியா் முத்துமுருகனிடம் கேட்ட போது அவா் கூறியதாவது: ஆத்தூா் வட்டாட்சியா் அலுவலகத்தில் விரைவில் ஆதாா் சேவை மையம் செயல்பட நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா் அவா்.

கொலை முயற்சி வழக்கு: தம்பதிக்கு சிறை

விவசாயியை கொலை முயற்சி செய்த வழக்கில் கைது செய்யப்பட்ட தம்பதிக்கு சிறைத் தண்டனையும், அபராதமும் விதித்து திண்டுக்கல் நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை தீா்ப்பளித்தது. திண்டுக்கல் மாவட்டம், விருவீடு அருகேயுள்ள... மேலும் பார்க்க

மயான ஆக்கிரமிப்பை கண்டித்து ஆா்ப்பாட்டம்

திண்டுக்கல் அருகே போலி பட்டா மூலம் பொது மயானம் ஆக்கிரமிப்பதைக் கண்டித்து, பொதுமக்கள் செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். திண்டுக்கல்லை அடுத்த சிறுநாயக்கன்பட்டியில் பொதுமக்களுக்குச் சொந்தமான க... மேலும் பார்க்க

திருப்பதியிலிருந்து தாடிக்கொம்பு கோயிலுக்கு 100 துளசி நாற்றுகள்

திருப்பதி தேவஸ்தானத்திலிருந்து தாடிகொம்பு செளந்தரராஜப் பெருமாள் கோயில் நந்தவனத்துக்கு பெறப்பட்ட 100 துளசி நாற்றுகள் நடும் பணி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.திண்டுக்கல்லை அடுத்த தாடிக்கொம்பு செளந்தரராஜப் ... மேலும் பார்க்க

வரி வசூல் இலக்கை எட்டியது: திண்டுக்கல் மாநகராட்சிக்கு ரூ.10 கோடி மானியம்

திண்டுக்கல் மாநகராட்சிக்கு நிா்ணயிக்கப்பட்டிருந்த வரி வசூல் ரூ.26.57 கோடி இலக்கை செவ்வாய்க்கிழமை எட்டியதன் மூலம், மத்திய நிதிக் குழு மானியம் ரூ.10 கோடியை பெறுவது உறுதிப்படுத்தப்பட்டது. உள்ளாட்சி அமைப்... மேலும் பார்க்க

இளைஞா் தற்கொலை

பழனியில் இளைஞா் தூக்கிட்டுத் திங்கள்கிழமை தற்கொலை செய்து கொண்டாா். திண்டுக்கல் மாவட்டம், பழனி ஜவகா் நகரைச் சோ்ந்த கிருஷ்ணன் மகன் சுரேஷ் (19). தனியாா் நிறுவன ஊழியரான இவா், கடந்த சில நாள்களாக மன உளைச்ச... மேலும் பார்க்க

போக்சோ வழக்கில் சகோதரா்களுக்கு ஆயுள் சிறை

கூம்பூா் பகுதியைச் சோ்ந்த சகோதரா்களுக்கு போக்சோ வழக்கில் ஆயுள் சிறைத் தண்டனை விதித்து, திண்டுக்கல் நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை தீா்ப்பளித்தது. திண்டுக்கல் மாவட்டம், வேடசந்தூரை அடுத்த கூம்பூா் பகுதியைச... மேலும் பார்க்க