Investment Scam: ஆளுக்கு ரூ.50 லட்சம்; ரூ.1500 கோடி இழந்த பெருநகர பணக்காரர்கள்!
ஆந்திரா: அதிகாலையில் தீப்பிடித்து எரிந்த ஆம்னி பேருந்து - 15 பேர் பலி; பயணிகளின் நிலை என்ன?
ஆந்திர பிரதேசம் மாநிலத்தின் கர்னூலில் இன்று அதிகாலை தனியார் சொகுசு பேருந்து தீப்பிடித்து எரிந்தது.
ஹைதராபாத்தில் இருந்து பெங்களூருக்கு சென்று கொண்டிருந்த ஆம்னி பேருந்து, ஒரு இரு சக்கர வாகனத்தின் மீது மோதி இருக்கிறது. மோதலுக்குப்பின் அந்த இருசக்கர வாகனம் பேருந்தின் அடிப்பகுதிக்குள் சிக்கியதால் திடீரென பேருந்து தீப்பிடித்து எரிந்துள்ளது..
ஏசி பஸ் என்பதால் தீ உடனடியாக பரவியிருக்கிறது. இந்த பேருந்தில் மொத்தம் 40 பேர் பயணித்ததாக கூறப்பட்டுள்ளது. இதில் 15 பேர் பலி என முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.
குர்னூல் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் விக்ராந்த் படில் கூறியதாவது, ”பேருந்து ஏசி மாடல் என்பதால் வெளியில் தப்பிக்க சிலர் கண்ணாடி உடைக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. தற்போது தீயணைப்பு படையினர் தீயை கட்டுப்படுத்தியுள்ளனர் 15 பேர் மீட்கப்பட்டு மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டுள்ளனர்” என்று கூறியிருக்கிறார்.
சிலர் அருகில் இருக்கும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் தகவல்கள் கூறுகின்றன. அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு வந்து மீட்பு பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். பயணிகளின் அடையாளம் உறுதி செய்யப்பட்ட பின் பலி எண்ணிக்கை குறித்த விவரங்கள் வெளியாகும் என்று கூறப்பட்டுள்ளது.
இந்த நிலையில் ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு இரங்கல் தெரிவித்து அரசு ஆதரவை உறுதி செய்துள்ளார்.
"கர்னூல் மாவட்டத்தில் உள்ள சின்னா தேகூர் கிராமத்திற்கு அருகே நடந்த பேருந்து தீ விபத்து குறித்து அறிந்து நான் அதிர்ச்சியடைந்தேன். தங்கள் அன்புக்குரியவர்களை இழந்தவர்களின் குடும்பங்களுக்கு எனது இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். காயமடைந்த மற்றும் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு அரசு அதிகாரிகள் அனைத்து ஆதரவையும் வழங்குவார்கள்" என்று சந்திரபாபு நாயுடு எக்ஸ் வலைதளத்தில் குறிப்பிட்டுள்ளார்.
I am shocked to learn about the devastating bus fire accident near Chinna Tekur village in Kurnool district. My heartfelt condolences go out to the families of those who have lost their loved ones. Government authorities will extend all possible support to the injured and…
— N Chandrababu Naidu (@ncbn) October 24, 2025

















