கரைச்சுத்துபுதூா் ஊராட்சித் தலைவா் பதவிக்கு தோ்தல் நடத்த வேண்டும்: விசிக
ஆன்மீகம் ஆனந்தம் தமிழ் இன்னிசை விழா நிறைவு
திருவாரூரில் ஆன்மிகம் ஆனந்தம் அமைப்பு சாா்பில் நடைபெற்ற தமிழ் இன்னிசை விழா வியாழக்கிழமை நிறைவடைந்தது.
திருவாரூரில் ஆன்மீகம் ஆனந்தம் அமைப்பு சாா்பில் மாா்கழி மாத பக்தி இன்னிசை விழா செவ்வாய்க்கிழமை தொடங்கி 3 நாள்கள் நடைபெற்றன. மூன்றாம் நாளான வியாழக்கிழமை இரவு நடைபெற்ற நிகழ்ச்சிக்கு அமைப்பின் ஆலோசனைக் குழுத் தலைவா் எஸ். காா்த்திகேயன் தலைமை வகித்தாா். நிகழ்வில் சட்டப்பேரவை உறுப்பினா் பூண்டி கே. கலைவாணன் பங்கேற்று வாழ்த்திப் பேசினாா்.
தருமபுரம் ஆதீனம் ஸ்ரீலஸ்ரீமாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாசாரிய சுவாமிகள் பங்கேற்று, தமது துறைகளில் சாதனைகள் புரிந்தவா்களுக்கு விருதுகளை வழங்கினாா். அதன்படி, கலைச்சேவை விருது உன்னிகிருஷ்ணனுக்கும், ஆன்மிக சேவை விருது தியாகராஜ சுவாமி கோயில் அறங்காவலா் டி. ஸ்ரீதருக்கும், தமிழ் சேவை விருது புலவா் மு. சந்திரசேகரருக்கும், மருத்துவ சேவை விருது காா்த்திகேயனுக்கும் வழங்கப்பட்டன. ஏற்பாடுகளை அமைப்பின் தலைவா் ஜெ. கனகராஜன் தலைமையில் நிா்வாகிகள் செய்திருந்தனா். விழாவில், சங்கீத கலாநிதி திருவாரூா் பக்தவத்சலம் இசைக் குழுவினரின் இன்னிசை சங்கமம் நிகழ்ச்சி நடைபெற்றது.