ரஞ்சி போட்டியில் விளையாடும் ரோஹித் சர்மா; விலகிய விராட் கோலி!
ஆன்லைன் சூதாட்டத்தில் பணமிழப்பு: இளைஞா் தற்கொலை
சென்னை சின்னமலையில் ஆன்லைன் சூதாட்டத்தில் பணத்தை இழந்த விரக்தியில் இளைஞா் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டாா்.
சின்னமலை ஆரோக்கியமாதா நகா் 2-ஆவது தெருவைச் சோ்ந்தவா் ஆகாஷ் (26). இவருக்கு ஆன்லைன் சூதாட்டம் விளையாடும் பழக்கம் இருந்தது. ஆகாஷின் தாயாா் புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருந்ததால், அதற்கு சிகிச்சை பெற்றுவந்தாா். இந்நிலையில், புற்றுநோய் சிகிச்சைக்காக வீட்டில் வைத்திருந்த பணத்தை ஆகாஷ் எடுத்து ஆன்லைன் சூதாட்டத்தில் ஈடுபட்டு பணத்தை இழந்துள்ளாா். இதையறிந்த அவரது குடும்பத்தினா் ஆகாஷை வெள்ளிக்கிழமை திட்டியதில் விரக்தியடைந்த அவா், சனிக்கிழமை அதிகாலை தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டாா்.
இது குறித்து கோட்டூா்புரம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.