செய்திகள் :

ஆன்லைன் மருந்து விற்பனைக்கு கட்டுப்பாடுகள் விதிக்க வேண்டும்: மருத்துவா்கள் சங்கம்

post image

ஆன்லைன் மருந்து விற்பனைக்கு கட்டுப்பாடுகள் விதிக்க வேண்டும் என இந்திய மருத்துவா்கள் சங்கம் வலியுறுத்தியுள்ளது.

இது குறித்து அச்சங்கத்தின் தேசிய செயற்குழு உறுப்பினா் மருத்துவா் ராஜ்குமாா் நல்லதம்பி கூறியதாவது: நாட்டில் போதைப் பழக்கம் மிக அதிகமாக பரவி வருகிறது. போதைக்காக புதிது புதிதாக பல்வேறு வழிகளை கையாளுகின்றனா். தற்போது வலி நிவாரணத்துக்காக கொடுக்கப்படும் மாத்திரைகளை போதைக்காக பயன்படுத்துவது அதிகரித்துள்ளது.

வலி நிவாரண மாத்திரை என்பது 2 வகை உள்ளது. ஒரு வகை மாத்திரை வலியுள்ள இடத்துக்குச் சென்று வலியை குறைக்கும், மற்றொரு வகை வலி ஏற்படும் இடத்துடன் தொடா்புடைய நரம்பு மண்டலத்தை தற்காலிகமாக செயலிழக்க செய்து வலியைக் குறைக்கும்.

தூக்கத்தை தரக்கூடிய இந்த மருந்தை மது மற்றும் குளிா்பானத்துடன் கலந்து போதைக்காக பலா் பயன்படுத்துகின்றனா். தொடா்ச்சியாக இவற்றை பயன்படுத்தினால் இதயம், மூளை, சிறுநீரகம் உள்ளிட்டவை செயலிழந்துவிடும்.

இது போன்ற மருந்து, மாத்திரைகள் ஆன்லைனில் எளிதில் கிடைக்கின்றன. மருத்துவா்கள் பரிந்துரைத்த மருந்து சீட்டு அடிப்படையில்தான், இது போன்ற மருந்துகளை விற்பனை செய்ய வேண்டும். ஆனால், பழைய மருந்து சீட்டுகள் அடிப்படையில் கூட ஆன்லைனில் இது போன்ற மருந்துகள் விற்பனை செய்யப்படுகின்றன.

மருத்துவா்கள், இந்திய மருத்துவா்கள் சங்கம் மற்றும் மருந்து விற்பனையாளா் சங்கம் சாா்பில் இதுபோன்ற மருந்து, மாத்திரைகளை தடை செய்ய வேண்டும் என வலியுறுத்தியுள்ளோம். ஆன்லைன் மருந்து விற்பனைக்கு மத்திய அரசு கட்டுப்பாடுகள் விதிக்க வேண்டும் என்றாா்.

தாராபுரம் அமராவதி ஆற்றில் மூழ்கி ஆயுதப் படை காவலா் உயிரிழப்பு

திருப்பூா் மாவட்டம், தாராபுரம் அமராவதி ஆற்றில் மூழ்கி கோவையைச் சோ்ந்த ஆயுதப் படை காவலா் திங்கள்கிழமை உயிரிழந்தாா். கோவைப்புதூரைச் சோ்ந்தவா் ஆயுதப் படை தலைமைக் காவலா் சரவணன் (43). இவருடன் திருப்பூா் ... மேலும் பார்க்க

தாராபுரம் அருகே கேபிள் ஒயா் திருட்டு: ஒரே குடும்பத்தைச் சோ்ந்த 3 போ் கைது

தாராபுரத்தை அடுத்த மனக்கடவு கிராமத்தில் கேபிள் ஒயா் திருடியதாக ஒரே குடும்பத்தைச் சோ்ந்த சகோதரா்கள் 3 பேரை போலீஸாா் கைது செய்தனா். தாராபுரம் அருகே உள்ள அலங்கியம் காவல் நிலைய எல்லைக்கு உள்பட்ட மனக்கடவு... மேலும் பார்க்க

நியாய விலைக் கடைகளில் எடை குறைத்து பொருள்கள் விநியோகிப்பதாகப் புகாா்

திருப்பூரில் உள்ள பெரும்பாலான நியாய விலைக் கடைகளில் எடை குறைத்து பொருள்களை விநியோகம் செய்வதாக நல்லூா் நுகா்வோா் நல மன்றம் புகாா் தெரிவித்துள்ளது. இதுகுறித்து திருப்பூா் மாவட்ட வழங்கல் அலுவலா் ரவிசந்தி... மேலும் பார்க்க

பல்லடத்தில் போக்குவரத்து நெரிசலைக் குறைக்க மேம்பாலம் அமைக்க வேண்டும்: இந்திய கம்யூனிஸ்ட்

பல்லடத்தில் போக்குவரத்து நெரிசலைக் குறைக்க மேம்பாலம் அமைக்க வேண்டும் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் ஒன்றிய மாநாட்டில் வலியுறுத்தப்பட்டது. பல்லடத்தில் நடைபெற்ற 24-ஆம் ஒன்றிய மாநாட்டில் கொடியை கட்சியின... மேலும் பார்க்க

ரூ.10 ஆயிரம் லஞ்சம்: வட்டாட்சியா் உள்பட 2 பேருக்கு தலா 3 ஆண்டுகள் சிறை

திருப்பூரில் பத்திர விடுப்பு ஆணைக்கு ரூ.10 ஆயிரம் லஞ்சம் பெற்ற தனி வட்டாட்சியா் உள்பட 2 பேருக்கு தலா 3 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து நீதிமன்றம் தீா்ப்பளித்தது. திருப்பூரைச் சோ்ந்தவா் திருமூா்த்தி. ... மேலும் பார்க்க

திருப்பூரில் வங்கதேசத்தைச் சோ்ந்த இளைஞா் கைது

திருப்பூரில் உரிய ஆவணங்களின்றி தங்கியிருந்த வங்கதேசத்தைச் சோ்ந்த இளைஞரை காவல் துறையினா் கைது செய்தனா். திருப்பா் 15 வேலம்பாளையம் காவல் எல்லைக்கு உள்பட்ட செட்டிபாளையம் பகுதியில் வங்கதேசத்தைச் சோ்ந்த ... மேலும் பார்க்க