செய்திகள் :

ஆன்லைன் மோசடி: பாகிஸ்தானில் 71 வெளிநாட்டவர் கைது!

post image

ஆன்லைன் மோசடியின் நடவடிக்கை தொடர்பாக 48 சீனர்கள் உள்பட 71 வெளிநாட்டினரை பாகிஸ்தான் அதிகாரிகள் கைது செய்துள்ளதாக அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

தேசிய சைபர் குற்ற புலனாய்வு நிறுவனம் லாகூரில் இருந்து சுமார் 130 கி.மீ தொலைவில் உள்ள பஞ்சாப் மாகாணத்தில் பைசலாபாத் நகரில் கால்சென்ட்டரில் ஆய்வு செய்து 150 பேரை கைது செய்தது.

அவர்களில் சீனா, நைஜீரியா, பிலிப்பின்ஸ், இலங்கை, வங்கதேசம், ஜிம்பாப்வே மற்றும் மியான்மரைச் சேர்ந்த சந்தேக நபர்கள் அடங்குவர் என்று அந்த அதிகாரி கூறினார்.

கைது செய்யப்பட்டவர்களில் சீனாவைச் சேர்ந்த 44 ஆண்கள், 4 பெண்கள், நைஜீரியாவைச் சேர்ந்த 3 ஆண்கள், 5 பெண்கள், 3 பிலிப்பின்ஸ், 2 இலங்கையைச் சேர்ந்தவர்கள், 6 பேர் வங்கதேசத்தினர், 1 ஜிம்பாப்வே மற்றும் மியான்மரைச் சேர்ந்த இரண்டு பெண்களும் அடங்குவர்.

அதிகாரிகளின் கூற்றுப்படி, வெளிநாட்டினர் வங்கி அமைப்புகளை ஹேக் செய்வதிலும், பல்வேறு சைபர் குற்றங்களைச் செய்வதிலும் ஈடுபட்டதாகக் கூறப்படுகிறது.

பணமோசடியில் ஈடுபட்ட கால்செண்டர் முன்னாள் மூத்த அரசு அதிகாரி ஒருவருக்குச் சொந்தமானதாகக் கூறப்படுகிறது. பலரிடம் மில்லியண் கணக்கான ரூபாய்களை மோசடி செய்தது தெரிய வந்துள்ளது.

மேலும் கால்செண்டரில் நடத்தப்பட்ட சோதனையின்போது ஏராளமான மடிக்கணினிகள், மின்னணு சாதனங்களைப் பறிமுதல் செய்தனர். குற்றம் சாட்டப்பட்ட 71 பேர் மீது மின்னணு குற்றத் தடுப்புச் சட்டத்தின் தொடர்புடைய பிரிவுகளின் கீழ் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

Pakistani authorities have arrested 71 foreign nationals, including 48 Chinese citizens, in connection with a major online fraud operation, an official said on Wednesday.

இதையும் படிக்க: மகாராஷ்டிரத்தை தொடர்ந்து பிகாரிலும் வாக்குத் திருட்டுக்கு முயற்சி: ராகுல் காந்தி

பாகிஸ்தானில் கனமழைக்கு 11 பேர் பலி!

பாகிஸ்தானின் பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில் பல்வேறு பகுதிகளில் பெய்த கனமழைக்கு இதுவரை 11 பேர் உயிரிழந்துள்ளனர். மாநிலத்தின் லாகூர், பஞ்சாப் மாகாணத்தில் சுற்றியுள்ள மாவட்டங்கள், பலுசிஸ்தானின் சில பகு... மேலும் பார்க்க

ராணா, பிரகாஷ் ராஜ், விஜய் தேவரகொண்டா உள்பட 29 பேர் மீது அமலாக்கத்துறை வழக்குப்பதிவு!

நடிகர்கள் ராணா டகுபதி, பிரகாஷ் ராஜ், விஜய் தேவரகொண்டா உள்பட 29 பிரபலங்களுக்கு எதிராக அமலாக்கத்துறை வழக்குப் பதிவு செய்துள்ளது.தெலங்கானாவின் மியாபூர் நகரைச் சேர்ந்த தொழிலதிபர் பி.எம்.பனீந்த்ரா சர்மா, ச... மேலும் பார்க்க

ஆதார் அட்டையை குடியுரிமை ஆவணமாக ஏற்க முடியாது: உச்ச நீதிமன்றத்தில் தேர்தல் ஆணையம்

புது தில்லி: இந்தியாவில், ஆதார் அட்டையை குடியுரிமை ஆவணமாக ஏற்க முடியாது என்று உச்ச நீதிமன்றத்தில், இந்திய தேர்தல் ஆணையம் திட்டவட்டமாகத் தெரிவித்துவிட்டது.நாட்டின் குடியுரிமை ஆவணம் தொடர்பான வழக்கு உச்ச... மேலும் பார்க்க

ரூ.2 ஆயிரம் கடனுக்காக இளைஞர் கொலை: தில்லியில் அதிர்ச்சி!

தில்லியின் ஜாஃப்ராபாத் பகுதியில் ரூ. 2 ஆயிரம் கடன் தொடர்பாக ஏற்பட்ட தகராறில் 23 வயது நபர் கத்தியால் குத்திக் கொல்லப்பட்ட சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்பட்டுள்ளது. முதற்கட்ட விசாரணையில், ஃபர்தீன்... மேலும் பார்க்க

தில்லி, ஹரியாணாவில் நிலநடுக்கம்!

தில்லியில் வியாழக்கிழமை காலை மிதமான நிலநடுக்கம் உணரப்பட்டதாக தேசிய நில அதிர்வுகள் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.இதுதொடர்பாக தேசிய நில அதிர்வுகள் ஆய்வு மையம் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், ஹரியாணா மாநில... மேலும் பார்க்க

குஜராத் பால விபத்து: பலி 11-ஆக உயர்வு; தொடரும் மீட்புப் பணி!

குஜராத் பால விபத்தில் பலியானோர் எண்ணிக்கை 11 ஆக உயர்ந்துள்ளது. இரண்டாவது நாளாக வியாழக்கிழமையும் மீட்புப் பணிகள் நடைபெற்று வருகின்றன.குஜராத்தின் வதோதரா, ஆனந்த் ஆகிய மாவட்டங்களுக்கு இடையே மஹிசாகா் ஆற்றி... மேலும் பார்க்க