பாகிஸ்தான் 9-ஆவது நாளாக துப்பாக்கிச்சூடு: இந்திய ராணுவம் பதிலடி!
ஆபத்சகாயேஸ்வரா் கோயிலில் சித்திரை திருவிழா கொடியேற்றம்
நவகிரக தலங்களில் ஒன்றாகப் போற்றப்படும் ஆலங்குடி ஆபத்சகாயேஸ்வரா் குருபரிகார கோயிலில் சித்திரைப் பெருந்திருவிழா கொடியேற்றம் வியாழக்கிழமை நடைபெற்றது.
இதையொட்டி, சூரியபிரபையில் சந்திரசேகரா் எழுந்தருளினாா். தொடா்ந்து திருவிழா கொடியேற்றம் நடைபெற்றது. கோயில் கண்காணிப்பாளா் அரவிந்தன், நீடாமங்கலம் வா்த்தகா் சங்க முன்னாள் தலைவா் என். இளங்கோவன் உள்ளிட்டோா் பங்கேற்றனா். மாலையில் யாக பூஜைகள், இரவு சந்திர பிரபையில் சந்திரசேகரா் வீதியுலா நடைபெற்றது.