செய்திகள் :

ஆபரேஷன் சிந்தூர்: சசி தரூர் தலைமையில் கனிமொழி உள்ளிட்ட எம்.பிகள் வெளிநாட்டு பயணம்; காரணம் என்ன?

post image

பஹல்காம் தீவிரவாதத் தாக்குதலுக்கு 'ஆபரேஷன் சிந்தூர்' மூலம் தக்க பதிலடியை கொடுத்துள்ளது இந்தியா.

பஹல்காம் தீவிரவாதத் தாக்குதல் நடந்தப் பின், பெரும்பாலான உலக நாடுகள் இந்தியாவிற்கு ஆதரவாக நின்றது. தீவிரவாதத்திற்கு எதிரான நிலைப்பாட்டை உறுதியாக எடுத்துரைத்தது.

இந்த நிலையில், தற்போது மத்திய அரசு, ஏழு நாடாளுமன்ற உறுப்பினர்களை இந்தியாவின் முக்கிய கூட்டாளி நாடுகளுக்கு அனுப்பி 'ஆபரேஷன் சிந்தூர்' குறித்து விளக்க உள்ளது. இதில் ஐக்கிய தேசிய பாதுகாப்பு கவுன்சிலும் அடங்கும்.

மத்திய அரசின் அறிவிப்பு
மத்திய அரசின் அறிவிப்பு

யார் யார் செல்கிறார்கள்?

நாடாளுமன்ற உறுப்பினர்கள் என்றதும் பாஜகவை சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் மட்டும் இந்தத் திட்டத்திற்கு அனுப்பப்போவதில்லை. இதில் அனைத்து கட்சிகளும் இடம்பெற்றுள்ளன.

அதன் படி, இந்தத் திட்டத்தில் மூலம் கூட்டாளி நாடுகளுக்கு செல்லப்போகும் நாடாளுமன்ற உறுப்பினர்கள்...

1. சசி தரூர், காங்கிரஸ்

2. ரவி சங்கர் பிரசாத், பாஜக

3. சஞ்சய் குமார் ஜா, ஜனதா தளம்

4. பைஜயந்த் பாண்டா, பாஜக

5. கனிமொழி கருணாநிதி, திமுக

6. சுப்ரியா சுலே, தேசியவாத காங்கிரஸ்

7. ஶ்ரீகாந்த் ஏக்நாத் ஷிண்டே, சிவ சேனா

இந்தக் குழுவிற்கு சசி தரூர் தலைமை தாங்க உள்ளார்.

எப்போது செல்வார்கள்?

இவர்கள் இந்த மாத இறுதியில் குறிப்பிட்ட நாடுகளுக்கு செல்ல இருக்கிறார்கள். இது கிட்டதட்ட 10 நாள் பயணமாக இருக்கும்.

என்ன செய்வார்கள்?

இவர்கள் இந்தியாவின் முக்கிய கூட்டாளி நாடுகளுக்கு சென்று இந்தியாவின் 'ஆபரேஷன் சிந்தூர்' குறித்து விளக்குவார்கள். மேலும், தீவிரவாதத்திற்கு எதிரான இந்தியாவின் உறுதியான நிலைப்பாட்டை அவர்கள் அந்த நாடுகளில் எடுத்துரைப்பார்கள்.

வழக்கு போட்ட 13 மாணவர்கள்; 'நீட் தேர்வு முடிவுகள் வெளியிடக் கூடாது' - சென்னை உயர் நீதிமன்ற உத்தரவு

நீட் தேர்வின் முடிவுகள் வரும் ஜூன் 14-ம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்தது. மத்திய பிரதேசத்தில் மாணவி ஒருவர் தொடர்ந்த வழக்கால் நீட் தேர்வின் முடிவுகள் வெளியிடக்கூடாது என்று மத்திய பிரதேச உயர் ... மேலும் பார்க்க

`நள்ளிரவில் வந்த போன்; இந்தியாவின் பாலிஸ்டிக் ஏவுகணைத் தாக்கியது’ - ஒப்புக்கொண்ட ஷெபாஸ் ஷெரீப்

கடந்த மே மாதம் 10-ம் தேதி, பஹல்காம் தீவிரவாதத் தாக்குதலுக்கு பதிலடியாக இந்தியா 'ஆபரேஷன் சிந்தூரை' நடத்தி முடித்தது. 'இந்திய ராணுவத்தை நாங்கள் தான் பெருமளவில் தாக்கினோம்' என்று இதுவரை கூறிவந்த பாகிஸ்தா... மேலும் பார்க்க

ஆப்கானின் 160 லாரிகள்; திறக்கப்பட்ட வாகா எல்லை - இந்தியா, பாகிஸ்தான் ஒப்புகொண்டது எப்படி?

இந்தியா மற்றும் உலக அரங்கின் பரபரப்பு செய்தியே, இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கரும், ஆப்கானிஸ்தான் வெளியுறவுத் துறை அமைச்சர் அமீர் கான் முத்தகியும் நேற்று, உரையாடி கொண்டது தான். 'ஏன் இது அவ்... மேலும் பார்க்க