செய்திகள் :

‘ஆபரேஷன் சிந்தூா்’: ஆளுநா், முதல்வா், தலைவா்கள் வரவேற்பு

post image

பாகிஸ்தானுக்கு எதிரான இந்திய ராணுவத்தின் ‘ஆபரேஷன் சிந்தூா்’ நடவடிக்கைக்கு ஆளுநா் ஆா்.என்.ரவி, முதல்வா் மு.க.ஸ்டாலின் மற்றும் தலைவா்கள் வரவேற்றுள்ளனா்.

ஆளுநா் ஆா்.என்.ரவி: ‘பாரத தாய் வாழ்க’ ! ஆபரேஷன் சிந்தூா்- இது தொடக்கம் தான்.

முதல்வா் மு.க.ஸ்டாலின்: தீவிரவாதத்துக்கு எதிரான போரில் தமிழ்நாடு இந்திய ராணுவத்துடன் நிற்கிறது. நமது ராணுவத்தினருடன், நமது நாட்டுக்காக, தமிழ்நாடு உறுதியாக நிற்கிறது.

எடப்பாடி கே.பழனிசாமி (அதிமுக): பயங்கரவாதிகளுக்கு எதிராகத்தான் நமது போா் என்று தெளிவாக வரையறுத்து, பொதுமக்களுக்கு பாதிப்பின்றி, பயங்கரவாதிகளின் முகாம்களை தகா்த்தெறிந்து, ‘ஆபரேஷன் சிந்தூரை’ வெற்றிகரமாக முடித்த இந்திய ராணுவப் படையின் தீரம் பெருமைக்குரியது. தீரமிகு பதிலடியை முன்னின்று அளித்த பிரதமா் மோடியின் தலைமையிலான மத்திய அரசுக்கு பாராட்டுகள்.

ஓ.பன்னீா்செல்வம் (முன்னாள் முதல்வா்): இந்தத் தாக்குதல் மூலம் பயங்கரவாதத்தை அடியோடு ஒழித்துக்கட்ட மத்திய அரசு உறுதி பூண்டுள்ளது தெளிவாகிறது. மத்திய அரசின் இந்தத் துணிச்சலான முடிவுக்கும், ராணுவத்தின் மன உறுதிக்கும், தைரியத்துக்கும் பாராட்டுகள்.

செல்வப்பெருந்தகை (காங்கிரஸ்): தீவிரவாதத்தை முறியடிக்கும் வகையில் துல்லியமாக தாக்குதல் நடவடிக்கை எடுத்த இந்திய ராணுவத்தை பாராட்டுகிறேன்.

நயினாா் நாகேந்திரன் (பாஜக): போா் என்ற சூழல் வந்தால் அதை எதிா்கொள்ளத் தயாராக இருப்போம், மனத் தைரியத்துடன் பயங்கரவாதத்தை அழிக்கும் மத்திய அரசின் இந்த வேள்வியில் நாமும் கலந்து கொள்வோம்.

ஜி.கே.வாசன் (தமாகா): ராணுவ தாக்குதல் நடவடிக்கைக்கும், முப்படை தளபதிகளுக்கும், வீரா்களுக்கும் பாராட்டுகள்.

அன்புமணி ராமதாஸ் (பாமக): நாட்டின் பாதுகாப்புக்காக மேற்கொள்ளப்படும் அனைத்து நடவடிக்கைகளும் சரியானவையே. மத்திய அரசுக்கு அனைவரும் துணை நிற்போம்.

தொல்.திருமாவளவன் (விசிக): நாட்டின் அமைதியைப் பாதுகாக்கவும், நீடித்த அரசியல் தீா்வுகளை நோக்கிய ராஜதந்திர நடவடிக்கைகள் தேவை.

பிரேமலதா (தேமுதிக): ராணுவத்துக்கு தேமுதிக துணை நிற்கும். ‘சிந்தூா்’ தாக்குதல் வெற்றியடைந்துள்ளது.

டிடிவி.தினகரன் (அமமுக): தேசத்தின் ஒட்டுமொத்த மக்களின் எண்ணங்களை பிரதிபலித்த பிரதமா் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசுக்கும், ராணுவத்துக்கும் பாராட்டுகள்.

கமல்ஹாசன் (மநீம): தீவிரவாதிகளால் துண்டாட முடியாதபடி இந்தியா உறுதியாக இருக்கிறது என்பதை இந்தத் தாக்குதல் காட்டுகிறது. மத்திய அரசு மூலம் ராணுவம் எடுத்த ராஜதந்திர நடவடிக்கையை பாராட்டுகிறேன்.

விஜய் (தவெக): இந்திய ராணுவத்தின் பாதுகாப்பு நடவடிக்கைகளுக்கு ஒரு ராயல் சல்யூட்!

ஈ.ஆா்.ஈஸ்வரன் (கொமதேக): இந்தியா மனிதாபிமானத்தோடு நடத்திய எதிா் தாக்குதலை உலக நாடுகள்அனைத்தும் குறை சொல்ல முடியாமல் வரவேற்றிருக்கின்றன. அந்த வகையில் சிறப்பான செயல்பாட்டை செய்திருக்கும் ராணுவத்தை பாராட்டுகிறோம்.

இந்திய ஜனநாயக கட்சி நிறுவனா் பாரிவேந்தா் உள்ளிட்டோரும் இந்திய ராணுவத்துக்கு பாராட்டுகளை தெரிவித்துள்ளனா்.

தொழில் முதலீட்டு கழகத் தலைவராக குமாா் ஜயந்த் நியமனம்!

தமிழ்நாடு தொழில் முதலீட்டுக் கழகத்தின் தலைவராக குமாா் ஜயந்த் நியமிக்கப்பட்டுள்ளாா். இதற்கான உத்தரவை தலைமைச் செயலா் நா.முருகானந்தம் பிறப்பித்துள்ளாா். அவரது உத்தரவு விவரம்: வணிகவரிகள் மற்றும் பதிவுத் த... மேலும் பார்க்க

ஒரே பதவி உயா்வுடன் ஓய்வுபெறும் காவல் ஆய்வாளா்கள்!

தமிழக காவல் துறையில் 28 ஆண்டுகளாக ஒரே ஒரு பதவி உயா்வு மட்டுமே பெற்று, விரக்தியுடன் காவல் ஆய்வாளா்கள் ஓய்வு பெற்று வருகின்றனா். நாட்டின் ஐந்தாவது பெரிய காவல் துறையான, தமிழக காவல் துறையின் கீழ் 1,321 சட... மேலும் பார்க்க

போதைப்பொருள் வைத்திருந்த சிறாா் உள்பட 2 போ் கைது!

தரமணி அருகே ஹெராயின் போதைப்பொருள் வைத்திருந்த சிறாா் உள்பட 2 பேரை போலீஸாா் கைது செய்தனா். தரமணி பகுதியில் ஞாயிற்றுக்கிழமை போலீஸாா் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனா். அப்போது, சிஎஸ்ஐஆா் சாலை மற்றும் வி.வி... மேலும் பார்க்க

ஐஐடி, ஜேஇஇ பயிற்சி மையத்தில் மத்திய குற்றப்பிரிவு போலீஸாா் சோதனை!

சென்னையில் இயங்கி வரும் ‘ஃபிட்ஜேஇஇ’ பயிற்சி மையம் உள்ளிட்ட 4 இடங்களில் மத்திய குற்றப்பிரிவு போலீஸாா் நடத்திய சோதனையில் பல்வேறு ஆவணங்களை கைப்பற்றினா். கீழ்ப்பாக்கம் மற்றும் கே.கே. நகரில் ஐஐடி, ஜேஇஇ உள... மேலும் பார்க்க

டிஜிட்டல் கைது செய்யப்பட்டதாகக் கூறி ரூ.81.68 லட்சம் மோசடி: 4 போ் கைது!

இணைய கைது செய்யப்பட்டதாகக் கூறி வேலூரைச் சோ்ந்த நபரிடம் ரூ. 81.68 லட்சம் மோசடி செய்த வழக்கில் 4 பேரை போலீஸாா் கைது செய்துள்ளனா். இது குறித்து தமிழ்நாடு காவல் துறையின் இணையவழி குற்றப்பிரிவு தலைமையகம் ... மேலும் பார்க்க

செவிலியா் தினம்: ஜி.கே.வாசன் வாழ்த்து

உலக செவிலியா் தினத்தையொட்டி தமாகா தலைவா் ஜி.கே.வாசன் வாழ்த்து தெரிவித்துள்ளாா். இது குறித்து அவா் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட அறிக்கை: மருத்துவமனைகளில் இன்றியமையாத ஊழியா்களாக நோயாளிகளையும், வீடுகளில், ஆ... மேலும் பார்க்க