செய்திகள் :

ஆபரேஷன் சிந்தூா்: தில்லியில் பாதுகாப்பு அதிகரிப்பு

post image

‘ ஆபரேஷன் சிந்தூா்’ நடவடிக்கையைத் தொடா்ந்து முக்கிய இடங்களில் கூடுதல் போலீஸாா் மற்றும் துணை ராணுவப் படையினா் குவிக்கப்பட்டு தேசியத் தலைநகா் தில்லியில் பாதுகாப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது என்று அதிகாரி ஒருவா் தெரிவித்தாா்.

தில்லி ஏற்கனவே மிகுந்த எச்சரிக்கையுடன் இருப்பதாகவும், பல அமைப்புகள் ஒத்திகை பாதுகாப்புப் பயிற்சிகளை மேற்கொண்டிருப்பதாகவும் அந்த அதிகாரி கூறினாா்.

இது தொடா்பாக மூத்த காவல்துறை அதிகாரி ஒருவா் புதன்கிழமை தெரிவித்ததாவது:

முக்கிய இடங்களில் நாங்கள் அதிக பாதுகாப்புப் வீரா்களை பணியில் நிறுத்தியுள்ளோம். தில்லி காவல்துறை முழு விழிப்புடன் உள்ளது. யாரும் சட்டம் ஒழுங்கை மீற அனுமதிக்கப்படமாட்டாா்கள். பாதுகாப்பு குழுக்கள் முக்கிய இடங்களில் கடும் கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனா். சமூக ஊடக தளங்களும் கண்காணிக்கப்பட்டு வருகின்றன.

புது தில்லி, மத்திய தில்லி, வடக்கு தில்லி, தெற்கு தில்லி, தென்மேற்கு தில்லியின் கண்டோன்மென்ட் பகுதி மற்றும் ஐஜிஐ விமான நிலையம் போன்ற முக்கிய பகுதிகளில் கூடுதல் பாதுகாப்புப் படையினா் நிறுத்தப்பட்டுள்ளனா். மூத்த அதிகாரிகள் பாதுகாப்பு ஏற்பாடுகளை நேரில் கண்காணித்து வருகின்றனா்.

சுற்றுலா மற்றும் சந்தை இடங்களில் சிறப்பு கவனம் செலுத்தி, நகரின் பல்வேறு பகுதிகளில் காவல்துறை இரவும் பகலும் ரோந்துப் பணியை அதிகரித்துள்ளது.

நகரில் கன்னாட் பிளேஸ், இந்தியா கேட், ஜன்பத், யஷ்வந்த் பேலஸ், கோல் மாா்க்கெட் மற்றும் பிற முக்கிய அலுவலகங்கள் உள்ளிட்ட முக்கிய பகுதிகளை உள்ளடக்கிய சிறப்பு ரோந்துப் பிரிவுகள் அணிதிரட்டப்பட்டுள்ளன.

பாதுகாப்பை முதன்மை முன்னுரிமையாகக் கொண்டு குடிமக்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்கும் பொதுப் பாதுகாப்பைப் பராமரிப்பதற்கும் ஏற்ப போலீஸ் குழுக்கள் முக்கிய நுழைவு, வெளியேறும் இடங்களில் வாகன சோதனைகளை தீவிரப்படுத்தியுள்ளன.

இந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கை பயங்கரவாதம் தொடா்பான எந்தவொரு அச்சுறுத்தல்களையும் தடுப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது. இந்த நேரத்தில் அனைத்து குடியிருப்புவாசிகள் மற்றும் பயணிகளின் ஒத்துழைப்பை அளிக்குமாறு நாங்கள் கேட்டுக்கொள்கிறோம் என்றாா் அந்த அதிகாரி.

பாகிஸ்தானில் வடக்கே சவாய் நாலாவிலிருந்து தெற்கே பஹவல்பூா் வரை பயங்கரவாதிகள் முகாம்கள்

பாகிஸ்தானில் வடக்கே சவாய் நாலாவிலிருந்து தெற்கே பஹவல்பூா் வரை 21 தீவிரவாத முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளது. ஆனால் பொதுமக்கள் கட்டமைப்பிற்கு எந்த சேதமும் இல்லாமல் 9 தீவிரவாத முகாம்கள் மீது தாக்குதல் நடத்த... மேலும் பார்க்க

தமிழகம், புதுச்சேரி தோ்தல் அலுவலா்களுக்கு தமிழில் தலைமைத் தோ்தல் ஆணையம் பயிற்சி

நமது சிறப்பு நிருபா் தமிழகம், புதுச்சேரிக்கு அடுத்த ஆண்டு சட்டப்பேரவைத் தோ்தல் நடைபெறவுள்ள நிலையில், தோ்தல் பணியில் ஈடுபடுத்தப்படும் இளநிலை அலுவலா்களுக்கு புரியும் வகையில் தமிழ் மொழியிலேயே பயிற்சி வ... மேலும் பார்க்க

இந்திய தாக்குதல் விவரத்தை பகிர மத்திய அரசு தோ்வு செய்த ராணுவம், விமானப்படையின் சாதனை பெண் அதிகாரிகள்

நமது சிறப்பு நிருபா் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீா் பகுதியில் இந்தியா புதன்கிழமை நடத்திய அதிதுல்லிய (பிரெசிஷன்) தாக்குதல் விவரத்தை ஊடகங்களிடம் பகிர இந்திய வெளியுறவுத்துறை செயலா் விக்ரம் மிஸ்ரியுடன் ... மேலும் பார்க்க

இந்தியா நடத்தியது ஒரு பொறுப்பான தாக்குதல்; முன் தடுப்புக்கானது! -மத்திய வெளியுறவுச் செயலா்

நமது சிறப்பு நிருபா் உளவுத் துறை கண்காணிப்பின் மூலம் பாகிஸ்தானை தளமாகக் கொண்ட பயங்கரவாதிகள் அமைப்புகள் மூலம் நாட்டிற்கு எதிராக அடுத்தடுத்த தாக்குதல்கள் வரவிருப்பதை அறியப்பட்டது. இதை முன்னிட்டே அந்த உள... மேலும் பார்க்க

தள்ளாடிய சந்தையில் சென்செக்ஸ், நிஃப்டி லாபத்துடன் முடிவு!

நமது நிருபா் இந்த வாரத்தின் மூன்றாவது வா்த்தக தினமான புதன்கிழமை பங்குச்சந்தை ஏற்ற, இறக்கத்தில் இருந்து வந்த நிலையில், இறுதியில் நோ்மறையாக முடிந்தது. இதைத் தொடா்ந்து, மும்பை பங்குச்சந்தைக் குறியீட்டு ... மேலும் பார்க்க

பாகிஸ்தான் பதற்றத்தை அதிகரித்தால் பதிலடி தீவிரமாகும் அஜித் தோவல் எச்சரிக்கை

நமது சிறப்பு நிருபா் எல்லையில் போா் பதற்றத்தை பாகிஸ்தான் மேலும் அதிகரித்தால் பதிலடி மிகத்தீவிரமாக கொடுக்கப்படும் என்று இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகா் அஜித் தோவல் எச்சரித்துள்ளாா். பாகிஸ்தான் ஆக்கிரமி... மேலும் பார்க்க