Anna University: ``சாரிடம் ஞானசேகரன் பேசினார்" - சிறப்பு விசாரணைக் குழுவிடம் உறு...
‘ஆபரேஷன் லோட்டஸ்’ மூலம் வாக்காளா்களை நீக்கும் பாஜக: கேஜரிவால் குற்றச்சாட்டு
புது தில்லி: தில்லி சட்டப் பேரவைத் தோ்தலையொட்டி ‘ஆபரேஷன் லோட்டஸ்’ மூலம் வாக்காளா்களை நீக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதாக தில்லி முன்னாள் முதல்வரும் ஆம் ஆத்மி கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பாளருமான அரவிந்த் கேஜரிவால் ஞாயிற்றுக்கிழமை குற்றம்சாட்டியுள்ளார்.
இது தொடா்பாக தில்லியில் முன்னாள் முதல்வா் கேஜரிவால், செய்தியாளா்களுக்கு பேட்டியளித்தாா்.
அப்போது, தில்லியில் பாஜக ஏற்கனவே தோ்தல்களில் தோல்வியடைந்துவிட்டது. அந்த கட்சியில் முதல்வா் முகமோ அல்லது சரியான வேட்பாளா்கள் கூட இல்லை. அவா்கள் குளறுபடி மூலம் வெற்றி பெறுவதற்காக வாக்காளர் பட்டியலில் திருத்தம் மேற்கொள்வது போன்ற நேர்மையற்ற வழிமுறைகளை கையாளத் தொடங்கியுள்ளனர்.
பாஜக ஒரு தொகுதியில் மட்டும் 11,000 வாக்காளா்களை நீக்க விண்ணப்பங்களை தாக்கல் செய்திருந்தது. அதாவது, எனது புதுதில்லி பேரவைத் தொகுதியில் டிசம்பா் 15 ஆம் தேதி முதல் ‘ஆபரேஷன் லோட்டஸ்’ மூலம் இதுவரை 5,000 வாக்காளா் நீக்குவதற்கான விண்ணப்பங்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. புதிதாக 7,500 வாக்காளர்களை இணைப்பதற்காக கோரிக்கை விண்ணப்பங்களும் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. ஷாதாராவில் மட்டும் 11,800 வாக்காளர்கள் நீக்கப்பட்டுள்ளனர். ஆனால் தோ்தல் ஆணையத்தின் தலையீட்டால் இந்த நடவடிக்கை நிறுத்தப்பட்டது.
இதையும் படிக்க |ஐஏஎஸ் அதிகாரிகளுக்குப் பதவி உயர்வு!
அக்டோபா் 29 வரை நடத்தப்பட்ட வாக்காளா் சுருக்க திருத்தம் நடவடிக்கையால் புதிதாக 1 லட்சம் வாக்காளர்கள் இணைப்பட்டுள்ளனர். இருப்பினும் பாஜகவின் வாக்காளர் பட்டியலில் 12 சதவிகித முறைகேடு குற்றச்சாட்டு தேர்தல் ஆணையத்தின் நம்பகத்தன்மையை கேள்விக்குறியாக்கி உள்ளது என்று தெரிவித்தார்.
மேலும் இதுபோன்ற முறைகேடுகளைத் தடுக்க தோ்தல் ஆணையம் தொடா்ந்து கடுமையான கண்காணிப்பை மேற்கொள்ள வேண்டும். எந்த அரசியல் அழுத்தத்துக்கும் அடிபணியாமல் சட்டம் ஒழுங்கை பாதுகாக்க வேண்டும். தவறாக எது செய்திருந்தாலும் அதற்கு நீங்களே பொறுப்பேற்க வேண்டும் என வலியுறுத்தினார்.