ஆப்கனில் அடுத்தடுத்து நிலநடுக்கம்: மக்கள் அச்சம்!
ஆப்கானிஸ்தானில் அடுத்தடுத்து இரண்டு முறை நிலநடுக்கம் ஏற்பட்டதாகத் தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக நிலஅதிர்வு மையம் வெளியிட்ட தகவலில்,
முதல் முறையாக இன்று அதிகாலை 4.20 மணியளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவில் 4.5 அலகுகளாக பதிவானது. இது 100 கி.மீ ஆழத்தில் ஏற்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து, இரண்டாவதாக ரிக்டர் அளவில் 4.2 அலகுகளாக இன்று அதிகாலை 4.33 மணிக்கு 150 கி.மீ ஆழத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டது.
இரண்டு நிலநடுக்கமும் அடுத்தடுத்து அரைமணி நேரத்திற்குள் ஏற்பட்டதால், அப்பகுதியில் வசிக்கும் மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியது.
நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேதங்கள் குறித்த உறுதியான தகவல்கள் எதுவும் இதுவரை வெளியிடப்படவில்லை.