செய்திகள் :

ஆமைகளை வேட்டையாடிய 2 பேர் கைது!

post image

உத்தரப் பிரதேச மாநிலம் பிலிபித் மாவட்டத்திலுள்ள புலிகள் காப்பகத்தில் ஆமைகளை வேட்டையாடிய 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

பிலிபித் மாவட்டத்தில் தியோரியா சரங்கத்திற்கு உள்பட்ட புலிகள் காப்பகம் ஒன்று செயல்பட்டு வருகின்றது. நேற்று (டிச.28) மாலை அப்பகுதியின் வனத்துறை அதிகாரிகள் வழக்கமான ரோந்து பணியில் ஈடுப்பட்டிருந்தனர்.

அப்போது அங்குள்ள 16 வது பிரிவின் குளத்தில் ஆமைகளை வேட்டையாடிய ரஜ்னீத் ஹல்கார் மற்றும் உத்தம் பச்சார் ஆகியோரை வனத்துறை அதிகாரிகள் கைது செய்தனர்.

மேலும், இந்த வேட்டையில் ஈடுபட்டு தப்பியோடி தலைமறைவாகிய அவர்களது கூட்டாளியான மூன்றாவது நபரைத் தேடி வருகின்றனர்.

இதையும் படிக்க: தேனீக்கள் கொட்டியதில் பொறியாளர் பலி!

அவர்கள் வேட்டையாடிய 7 ஆமைகளில், 6 ஆமைகள் பாதுகாக்கப்பட்ட உயிரினங்கள் பிரிவு ஒன்றை சேர்ந்தவை என்றும், மற்றொன்று பாதுகாக்கப்பட்ட பிரிவு இரண்டை சேர்ந்த்து என அறியப்படுகிறது.

இதனைத் தொடர்ந்து அவர்கள் இருவரின் மீதும் இந்திய வனவிலங்கு சட்டம் 1972 கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்ட நிலையில் அவர்கள் இன்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.

மேலும், அவர்களிடமிருந்து மீட்கப்பட்ட ஆமைகள் நீதிமன்றத்தில் ஒப்படைக்கப்பட்ட பின்னர் நீர்நிலைகளில் விடுவிக்கப்பட்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உ.பி: நேபாளத்துக்கு போதைப் பொருள் கடத்த முயன்ற நபர் கைது!

இந்தியாவிலிருந்து நேபாளத்துக்கு போதைப் பொருள் கடத்த முயன்ற நபர் கைது செய்யப்பட்டார்.உத்தரப் பிரதேசத்தின் பஹ்ராய்ச் மாவட்டத்தில் இந்தியாவிலிருந்து நேபாள நாட்டிற்கு போதைப் பொருள் கடத்தப்படுவதாக நேற்று (... மேலும் பார்க்க

காதலியை கவர சிங்கத்தின் கூண்டுக்குள் சென்ற காதலன் பலி! விடியோ வைரல்!

மத்திய ஆசிய நாடான உஸ்பெகிஸ்தானில் காதலியை கவர சிங்கத்தின் குகைக்குள் சென்ற நபரை அதனுள் இருந்த சிங்கங்கள் தாக்கியதில் பலியாகியுள்ளார்.உஸ்பெகிஸ்தான் நாட்டின் தஷ்கெண்ட் மாகாணத்திலுள்ள பார்கெண்ட் நகரில் த... மேலும் பார்க்க

சிறுமி பாலியல் வன்கொடுமை செய்து கொலை! ஒருவர் கைது!

மத்தியப் பிரதேச மாநிலம் சியோனி மாவட்டத்தில் பழங்குடியைச் சேர்ந்த 6 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.சியோனி மாவட்டத்தில் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த 6 வய... மேலும் பார்க்க

5 நாள்களாக சிங்கங்களுக்கு மத்தியில் உயிர்வாழ்ந்த சிறுவன்!

தென்கிழக்கு ஆப்பிரிக்க நாடான ஜிம்பாப்வேவில் சிங்கங்கள் மற்றும் யானைகள் சூழ்ந்த விளையாட்டுப் பூங்காவில் 5 நாள்களாக சிக்கியிருந்த சிறுவன் உயிரோடு மீட்கப்பட்டுள்ளான்.வடக்கு ஜிம்பாப்வே பகுதியிலுள்ள தனது வ... மேலும் பார்க்க

காதலிக்க நேரமில்லை: புதிய பாடல் அறிவிப்பு!

காதலிக்க நேரமில்லை படத்தின் புதிய பாடல் வெளியீடு தொடர்பாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.ரெட் ஜெயன்ட் மூவிஸ் தயாரிப்பில் இயக்குநர் கிருத்திகா உதயநிதி இயக்கத்தில் ஏ.ஆர்.ரஹ்மான் இசையில், ஜெயம் ரவி, நித்யா மே... மேலும் பார்க்க

அகத்தியா பட டீசர்!

நடிகர்கள் ஜீவா, அர்ஜுன் நடிப்பில் உருவாகியுள்ள அகத்தியா படத்தின்டீசர் வெளியாகியுள்ளது.பாடலாசிரியர் பா. விஜய் இயக்கத்தில் நடிகர்கள் ஜீவா மற்றும் அர்ஜுன் பிரதான பாத்திரங்களில் நடிக்கும் படத்திற்கு அகத்த... மேலும் பார்க்க