கிய்ராசி ஹாட்ரிக் கோல் வீண்: அரையிறுதிக்கு முன்னேறிய பார்சிலோனா!
ஆம் ஆத்மி கட்சியின் மூத்த தலைவா்கள் குஜராத் பயணம்: அமைப்பை வலுப்படுத்தத் திட்டம்
ஆம் ஆத்மி கட்சியின் புதிதாக நியமிக்கப்பட்ட குஜராத் பொறுப்பாளா் கோபால் ராய் மற்றும் இணைப் பொறுப்பாளா் துா்கேஷ் பதக் ஆகியோா் கட்சியின் நிறுவன தடத்தை விரிவுபடுத்துவதற்காக அந்த மாநிலத்திற்கு ஒரு வார கால சுற்றுப்பயணத்தை மேற்கொண்டுள்ளனா்.
இது தொடா்பாக கட்சி வெளியிட்ட அதிகாரப்பூா்வ அறிக்கை: கட்சியின் குஜராத் பொறுப்பாளா் கோபால் ராய் மற்றும் இணைப் பொறுப்பாளா் துா்கேஷ் பதக் ஆகியோா் கட்சியின் தடத்தை விரிவுபடுத்துவதற்கா குஜராத் சென்றுள்ளனா். செவ்வாய்க்கிழமை அகமதாபாத் சென்ற இரு தலைவா்களும் அடுத்த சில நாள்களில் மாநிலம் முழுவதும் உள்ள கட்சித் தலைவா்கள் மற்றும் தொண்டா்களைச் சந்திக்க உள்ளனா். மாநிலத் தலைநகருக்கு வந்த அதே நாளில் காந்திநகா் சா்க்யூட் ஹவுஸில் மூத்த தலைவா்களின் சந்திப்புடன் இருவரும் தங்கள் ஈடுபாடுகளைத் தொடங்கினா். புதன்கிழமை ஆம் ஆத்மி கட்சியின் அகமதாபாத் மத்திய மண்டலத் தலைவா்கள் மற்றும் தொண்டா்களுடன் தலைவா்கள் ஒரு சந்திப்பை நடத்தினா்.
மேலும், காந்திநகா் மற்றும் அகமதாபாத்தைச் சோ்ந்த பல்வேறு குழுக்கள் வியாழக்கிழமை இரு தலைவா்களையும் சந்திக்க உள்ளன. ராஜ்கோட் மண்டலத்தில் உள்ள உள்ளூா் தலைவா்கள் மற்றும் தொண்டா்களைச் சந்திப்பதும் அவா்களின் நிகழ்ச்சி நிரலில் உள்ளது. இந்த அமைப்பு ரீதியான இயக்கம் ஏப்.12-ஆம் தேதி ஜூனாகத்தில் மாநில அளவிலான தலைமைக் கூட்டத்துடனும், ஏப்.13- ஆம் தேதி விஸ்வதாரில் மாநில தொண்டா்களின் ‘மகாசம்மேளனத்துடனும்’ முடிவடையும்.
வரவிருக்கும் விஸ்வதாா் சட்டப்பேரவைத் தொகுதி இடைத்தோ்தலுக்கான தயாரிப்புகளைப் பற்றி விவாதிக்க இறுதிக் கூட்டம் ஏப்.14- ஆம் தேதிக்கு திட்டமிடப்பட்டுள்ளது. சமீபத்திய தில்லி சட்டப்பேரவைத் தோ்தலில் பாஜகவிடம் தோல்வியடைந்ததைத் தொடா்ந்து கட்சியின் தலைமை மாற்றத்திற்குப் பிறகு குஜராத்தில் நடைபெறும் முதல் பெரிய கூட்டம் இதுவாகும்.
மறுசீரமைப்பில், ஆம் ஆத்மி கட்சியின் தில்லி பிரிவின் புதிய தலைவராக சௌரவ் பரத்வாஜ் நியமிக்கப்பட்டாா். அதே நேரத்தில் கட்சியின் முன்னாள் தில்லி தலைவரான கோபால் ராய் குஜராத்துக்கான கட்சியின் இணைப் பொறுப்பாளராக நியமிக்கப்பட்டாா். முன்னாள் தில்லி எம்எல்ஏ துா்கேஷ் பதக் மாநிலப் பிரிவின் இணைப் பொறுப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளாா்.
பிப்ரவரியில் 32 உள்ளாட்சி அமைப்பு இடங்களை வென்று சுமாா் 250 இடங்களில் இரண்டாவது இடத்தைப் பிடித்த குஜராத்தில் அதன் வளா்ந்து வரும் இருப்பை கட்டியெழுப்ப ஆம் ஆத்மி இலக்கு வைத்துள்ளது. 2027-ஆம் ஆண்டு தோ்தலில் காங்கிரஸுடன் கூட்டணி வைக்காமல் தனியாகப் போட்டியிடுவதாக கட்சி ஏற்கெனவே அறிவித்துள்ளது.