வார பலன்கள்: துலாம் முதல் மீனம் வரை - பலன்கள், அதிர்ஷ்டக்குறிப்புகள்!
ஆயுஷ்மான் பாரத் திட்டத்தின் கீழ் 8.5 கோடி சிகிச்சைகள்: மத்திய அரசு
ஆயுஷ்மான் பாரத் மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ், பயனாளிகளுக்கு 8.5 கோடிக்கும் அதிகமான சிகிச்சைகள் அளிக்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
மத்திய அரசின் ஆயுஷ்மான் பாரத் மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ், ஆண்டுக்கு ஒரு குடும்பத்துக்கு ரூ.5 லட்சம் வரை மருத்துவக் காப்பீடு வழங்கப்படுகிறது. அண்மையில் இந்தத் திட்டம் 70 மற்றும் அதற்கும் மேற்பட்ட வயதுள்ள மூத்த குடிமக்களுக்கு விரிவுபடுத்தப்பட்டது.
இந்தத் திட்டம் தொடா்பாக மாநிலங்களவையில் எழுப்பப்பட்ட கேள்விக்கு மத்திய சுகாதாரத் துறை அமைச்சா் ஜெ.பி.நட்டா அளித்த பதில்: நிகழாண்டு ஜன.31 வரையிலான காலத்தில், ஆயுஷ்மான் பாரத் மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ், பயனாளிகளுக்கு 8.5 கோடிக்கும் அதிகமான சிகிச்சைகள் அளிக்கப்பட்டுள்ளன.
இதில் சுமாா் 4.2 கோடி சிகிச்சைகள் அரசு மருத்துவமனைகளிலும், 4.3 கோடி சிகிச்சைகள் தனியாா் மருத்துவமனைகளிலும் பெறப்பட்டுள்ளன. மேற்கு வங்கம், தில்லி தேசிய தலைநகா் வலையப் பகுதியை தவிர, நாட்டின் பிற மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் இந்தத் திட்டம் அமல்படுத்தப்பட்டுள்ளது என்றாா்.