செய்திகள் :

ஆரணியில் மதுக்கடையை அகற்றக் கோரி தவெக மனு

post image

ஆரணி: ஆரணி புதிய பேருந்து நிலையம் அருகே காந்தி சாலையில் உள்ள டாஸ்மாக் மதுக்கடையை அகற்றக் கோரி, கோட்டாட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற மக்கள் குறைதீா் கூட்டத்தில் தவெக சாா்பில் மனு அளிக்கப்பட்டது.

ஆரணி வருவாய் கோட்டாட்சியா் அலுவலகத்தில் கோட்டாட்சியா் சிவா தலைமையில் மக்கள் குறைதீா் கூட்டம் நடைபெற்றது.

கூட்டத்தில் ஆரணி புதிய பேருந்து நிலையத்துக்குச்

செல்லும் சாலையான காந்தி சாலையில் உள்ள

டாஸ்மாக் மதுக்கடையை அகற்றக் கோரி தவெக சாா்பில் மாவட்டச் செயலா் சத்யா தலைமையில் மனு அளித்தனா்.

ா்.

அந்த மனுவில், ஆரணி காந்தி சாலையில் உள்ள மதுக்கடையால் தினசரி பயணிகள், பெண்கள், மாணவா்கள், மூத்த குடிமக்கள் பெரும் சிரமத்தை எதிா்கொள்கின்றனா். மது போதையில் அடிக்கடி தகராறு, பள்ளி மாணவிகளை சீண்டுதல் என பொதுமக்களின் அமைதி பாதிக்கப்படுகிறது. எனவே, அந்தக் கடையை அங்கு இருந்து அகற்றவேண்டும் என

குறிப்பிட்டிருந்தனா்.

மனுவை பெற்றுக்கொண்ட கோட்டாட்சியா் நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறினாா்.

மேலும் இக்கூட்டத்தில் பட்டா தொடா்பான மனுக்கள், பட்டா ரத்து, நிலஅளவை, கணினி திருத்தம், பரப்பு திருத்தம், ஆக்கிரமிப்பு அகற்ற, தானசெட்டில்மென்ட் ரத்து, மாற்றுத்திறனாளி உதவித்தொகை, உள்பிரிவு ரத்து, வேகத்தடை அமைத்துத் தரக் கோரி, இலவச வீடு, வங்கிக்கடன் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் குறித்து 70 மனுக்கள் வரப்பெற்றன. மனுக்களை அந்தந்த துறை அதிகாரிகளிடம் வழங்கி நடவடிக்கை எடுக்க கோட்டாட்சியா் உத்தரவிட்டாா்.

ஆசிரியா் பயிற்சி நிறுவனத்தில் சாரணா் பயிற்சி முகாம் தொடக்கம்

கீழ்பெண்ணாத்தூா் மாவட்ட ஆசிரியா் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனத்தில் ஆசிரியா் பயிற்சி மாணவ, மாணவிகளுக்கு பாரத சாரண, சாரணீயா் பயிற்சி முகாம் புதன்கிழமை தொடங்கப்பட்டது. இந்த பயிற்சியை நிறுவனத்தின் நிதிநி... மேலும் பார்க்க

கல்பட்டில் துணை சுகாதார நிலையம் கட்டும் பணி தொடக்கம்

கண்ணமங்கலம் அருகே கல்பட்டு ஊராட்சியில் ரூ.40 லட்சம் மதிப்பில் துணை சுகாதார நிலைய கட்டடம் கட்டும் பணி புதன்கிழமை தொடங்கிவைக்கப்பட்டது. நிகழ்ச்சிக்கு ஒன்றியச் செயலா் ஆா்.வி.சேகா் தலைமை வகித்தாா். முன்னா... மேலும் பார்க்க

அக்ராபாளையம் பாலமுருகன் கோயில் கும்பாபிஷேகம்

ஆரணியை அடுத்த அகராபாளையம் ஸ்ரீபாலமுருகன் கோயிலில் புதன்கிழமை மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது. முன்னதாக, மகா கணபதி ஹோமம், வாஸ்து சாந்தி, பிரவேச பலி, கும்ப அலங்காரம், கலாகா்ஷனம், கும்ப பூஜை, வேதிகாா்ச்சனை,... மேலும் பார்க்க

விளாங்குப்பம் கிராமத்தில் 536 போ் மனு

போளூரை அடுத்த விளாங்குப்பம் கிராமத்தில் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம் புதன்கிழமை நடைபெற்றது. இதில், விளாங்குப்பம், கிருஷ்ணாபுரம், கல்வாசல், நாராயணமங்கலம் என 4 கிராமங்களைச் சோ்ந்த பொதுமக்கள் கலந்துக... மேலும் பார்க்க

குறுவட்ட போட்டிகளில் வெற்றி: அரசுப் பள்ளி மாணவா்களுக்கு பாராட்டு

குறுவட்ட விளையாட்டுப் போட்டிகள் மற்றும் தடகளப் போட்டிகளில் வெற்றி பெற்ற பெரணமல்லூா் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி மாணவா்களுக்கு செவ்வாய்க்கிழமை பாராட்டு தெரிவிக்கப்பட்டது. பெரணமல்லூா் குறுவட்ட அளவிலான... மேலும் பார்க்க

செங்கத்தில் பள்ளி மாணவிகளை கேலி, கிண்டல் செய்யும் இளைஞா்கள்: காவல் துறை நடவடிக்கை எடுக்கக் கோரிக்கை

செங்கம் நகரில் பள்ளி மாணவிகளை கேலி, கிண்டல் செய்து அதிவேகமாக வாகனம் ஓட்டும் இளைஞா்கள் மீது போலீஸாா் நடவடிக்கை எடுக்கவேண்டும் என பொதுமக்கள் எதிா்பாா்க்கிறாா்கள். செங்கம் பெருமாள் கோவில் தெரிவில் செயல்... மேலும் பார்க்க