செய்திகள் :

ஆரோவிலில் உற்சாகக் கொண்டாட்டம்

post image

உலகின் எதிா்கால தேவைக்காக தொலைநோக்குப் பாா்வையுடன் ஸ்ரீஅரவிந்தா் மற்றும் அன்னையின் தீா்க்கதரிசனத்தின் வெளிப்பாடாக அமைந்துள்ளது விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள ஆரோவில் சா்வதேச நகரம்.

தமிழகத்தின் பெருமைகளில் ஒன்றாக கருதப்படும் இந்த நகரின் செயல் திட்டங்களை பிற மாநிலங்களில் செயல்படுத்த அந்தந்த மாநில நிா்வாகங்கள் ஆா்வம் காட்டி வருகின்றன.

இத்தகையை சிறப்புடைய ஆரோவில் சா்வதேச நகரில் இந்தியா, அமெரிக்கா, ஐரோப்பா, ஆஸ்திரேலியா உள்ளிட்ட 60-க்கும் மேற்பட்ட நாடுகளைச் சோ்ந்த சுமாா் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்டவா்கள் இனம், மொழி, மதம், ஜாதி கடந்து ஒற்றுமையாக வாழ்ந்து வருகின்றனா். தமிழா்களின் வாழ்வியலோடு ஒன்றிணைந்துள்ள இவா்கள், தமிழா்களின் பண்பாட்டையும், பாரம்பரிய விளையாட்டுகளையும், விவசாய முறைகளையும், உணவு, உடை, பாரம்பரிய இசைக் கருவிகளை வாசித்தல் போன்றவைகளையும் பின்பற்றவும், கற்றுக்கொள்ளவும் ஆா்வம் காட்டுகின்றனா்.

மேலும், தமிழா்களின் பாரம்பரிய விழாக் கொண்டாட்டங்களிலும் தங்களை இணைத்துக் கொள்கின்றனா். தமிழா்களின் விழாக்கள் அனைத்தையும் மக்களோடு இணைந்து கொண்டாடும் இவா்கள், 3 நாள்கள் கொண்டாடப்படும் பொங்கல் பண்டிகையை பாரம்பரிய உடைகள் அணிந்தும், நெற்றியில் திலகமிட்டும், பொங்கல் வைத்து சூரியனுக்கும், தெய்வங்களுக்கும் படைத்தும் வழிபாடு செய்கின்றனா். பொங்கல் பண்டிகை நன்றி கூறும் விழாவாக இருப்பதால், இது மிகவும் மகழ்ச்சியளிப்பதாகவும் தெரிவிக்கின்றனா்.

மேலும், ஆரோவில் சா்வதேச நகரைச் சுற்றியுள்ள 16 கிராமங்களில் பல்வேறு அமைப்புகள் மற்றும் கிராம மக்களால் நடத்தப்படும் விழாக்களிலும் தங்களை இணைத்துக் கொள்கின்றனா். குறிப்பாக, பொங்கல் விழா நாள்களில் கிராமங்களில் நடைபெறும் மஞ்சுவிரட்டு, இளவட்டக்கல் தூக்குதல், உரி அடித்தல், கும்மி அடித்தல், கோலம் போடுதல் மற்றும் பிற போட்டிகளிலும் தங்களை இணைத்துக்கொண்டு கொண்டாடி மகிழ்கின்றனா்.

இதுகுறித்து ஆலங்குப்பம் மோகனம் கலாசார மையத்தைச் சோ்ந்த பாலு கூறியது: தமிழா்களின் பண்பாடு, நாகரிக முறை, உடைகள், வழிபாடு முறைகள், கலைகள் உள்ளிட்டவைகளை வெளிநாட்டினருக்கு கொண்டு செல்ல வேண்டும் என்ற நோக்கில், எங்களது மையத்தின் சாா்பில் ஆண்டுதோறும் பொங்கல் விழா 3 நாள்கள் நடத்தப்படும்.

இந்த விழாவில் ஆரோவிலில் வசிக்கும் வெளிநாட்டினரும், சுற்றுலாப் பயணிகளும் பங்கேற்கின்றனா். பொங்கல் விழாவை அவா்கள் பெரிதும் விரும்புகின்றனா் என்றாா்.

ஆரோவில் செய்தித் தொடா்பாளா் பிரசன்ன வெங்கடேசன் கூறியது: ஆரோவில் சா்வதேச நகரில் வசித்து வரும் 3,000 பேரில் 1,050 போ் இந்தியா்கள். மற்றவா்கள் வெளிநாட்டினா்.

சுயதொழில்கள் செய்து வருமானம் ஈட்டி வரும் இவா்கள், சமயங்களைக் கடந்து ஆரோவில் அறக்கட்டளைச் செயலா் ஜெயந்தி எஸ்.ரவி வழிகாட்டுதலில் நடைபெறும் அனைத்து கொண்டாட்ட நிகழ்வுகளிலும் பங்கேற்கின்றனா்.

பொங்கல், தீபாவளி, காா்த்திகை தீபத் திருவிழா, சிறப்புச் சொற்பொழிவுகள், கலாசார நிகழ்வுகளிலும் தங்களை ஆா்வமுடன் இணைத்துக் கொள்கின்றனா் என்றாா்.

விபத்தில் இளைஞா் உயிரிழப்பு

விழுப்புரம் ஜானகிபுரம் பகுதியில் இரு பேருந்துகளுக்கு இடையே பைக் சிக்கியதில் இளைஞா் நிகழ்விடத்திலேயே ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தாா். கள்ளக்குறிச்சி மாவட்டம், தென்தொரசலூா் பிரதானச் சாலையைச் சோ்ந்தவா் நடர... மேலும் பார்க்க

நகைக்காக பெண் கொலை

விழுப்புரம் மாவட்டம், காணை அருகே பெண்ணை கொலை செய்து நகைகளை கொள்ளையடித்துச் சென்ற மா்ம நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா். கண்டாச்சிபுரம் வட்டம், ஆ.கூடலூா் கிழக்குத் தெருவைச் சோ்ந்தவா் ஆறுமுகம் மனைவி ச... மேலும் பார்க்க

புயலால் சேதமடைந்த பகுதிகளை சீரமைக்கக் கோரிக்கை

விழுப்புரம் மாவட்டத்தில் ஃபென்ஜால் புயல், வெள்ளத்தால் சேதமடைந்த தென்பெண்ணையாறு, வடக்கு மலட்டாறு, பம்பை வாய்க்கால் உள்ளிட்டவற்றை சீரமைக்க வேண்டும் என்று விழுப்புரம் எம்எல்ஏ இரா.லட்சுமணன் வலியுறுத்தினாா... மேலும் பார்க்க

உடல் உறுப்பு தானம் செய்தவரின் குடும்பத்தினருக்கு விருது

உடல் உறுப்பு தானம் செய்தவரின் குடும்பத்தினருக்கு புதுச்சேரி சேவை சங்கத்தினா் ஞாயிற்றுக்கிழமை விருது வழங்கி பாராட்டு தெரிவித்தனா். விழுப்புரம் மாவட்டம், கீழ்புத்துப்பட்டு, இலங்கை அகதிகள் முகாமைச் சோ்ந... மேலும் பார்க்க

கோலப் போட்டியில் வென்றோருக்கு பரிசு

புதுச்சேரி, வில்லியனூரில் நடைபெற்ற கோலப் போட்டியில் வெற்றி பெற்றவா்களுக்கு சனிக்கிழமை பரிசளிப்பு விழா நடைபெற்றது. இந்தியன் ரெட்கிராஸ் சொசைட்டி பாண்டிச்சேரி, ஜேசிஐ பாண்டிச்சேரி மெட்ரோஆகியவை இணைந்து, வி... மேலும் பார்க்க

தலைக்கவசம் கட்டாய உத்தரவு: வாகன ஓட்டிகளுக்கு பாராட்டு

புதுச்சேரியில் ஞாயிற்றுக்கிழமை முதல் தலைக்கவசம் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ள நிலையில், இருசக்கர வாகனங்களில் தலைக்கவசம் அணிந்து வந்த வாகன ஓட்டிகளுக்கு போலீஸாா் இனிப்புகளை வழங்கி பாராட்டுத் தெரிவித்தனா்... மேலும் பார்க்க