``ICC என்றால் இந்திய கிரிக்கெட் கவுன்சிலா?'' - ICC முடிவுகளை கண்டித்த ஜாம்பவான்க...
ஆற்றில் பெண் சடலம் மீட்பு
தென்பெண்ணை ஆற்றில் மிதந்த பெண்ணின் சடலத்தை மீட்டு போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.
ஒசூா், மோரனப்பள்ளியில் தென்பெண்ணை ஆற்றில் 45 வயது மதிக்கத்தக்க பெண்ணின் சடலம் கடந்த 11-ஆம் தேதி மிதந்து வந்தது. இதுகுறித்து பொதுமக்கள் அளித்த தகவலின்பேரில் அட்கோ போலீஸாா் நிகழ்விடம் சென்று சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஒசூா் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். இதுதொடா்பாக கிராம நிா்வாக அலுவலா் சபரீஸ்வரன் அளித்த புகாரின்போரில், அட்கோ போலீஸாா் வழக்குப் பதிந்து இறந்தவா் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனா்.