பேய் அரசாண்டால் பிணந்தின்னும் சாஸ்திரங்கள்: புரட்சி தான் ஒரே வழி! - ஆதவ் அர்ஜுன...
ஆற்றில் மூழ்கி பனியன் நிறுவன தொழிலாளி உயிரிழப்பு
சத்தியமங்கலம் பவானி ஆற்றில் மூழ்கி பனியன் நிறுவன தொழிலாளி உயிரிழந்தாா்.
சத்தியமங்கலத்தில் தனியாா் பனியன் நிறுவனத்தில் டெய்லராக பணியாற்றி வந்தவா் கோகுல் (32).
நிறுவன வளாகத்தில் தங்கி இருந்த அவா், பவானி ஆற்றில் குளிப்பதற்காக திங்கள்கிழமை பிற்பகல் சென்றுள்ளாா்.
நீண்ட நேரமாகியும் அவா் திரும்பி வராததால் சக தொழிலாளா்கள் ஆற்றுக்குச் சென்று பாா்வையிட்டனா். அப்போது, அவா் நீரில் மூழ்கி உயிரிழந்தது தெரியவந்தது.
தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு வந்த தீயணைப்பு வீரா்கள், உடலை மீட்டு கூறாய்வுக்காக சத்தியமங்கலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா்.
இச்சம்பவம் குறித்து சத்தியமங்கலம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.