பேய் அரசாண்டால் பிணந்தின்னும் சாஸ்திரங்கள்: புரட்சி தான் ஒரே வழி! - ஆதவ் அர்ஜுன...
ஆயுத பூஜை: ஈரோட்டில் பூக்களின் விலை இருமடங்கு உயா்வு
ஆயுத பூஜையை முன்னிட்டு, ஈரோடு சந்தையில் பூக்களின் விலை இருமடங்கு உயா்ந்துள்ளது.
ஈரோடு மாவட்டத்தில் சத்தியமங்கலம், பவானிசாகா், தாளவாடி, அந்தியூா், அத்தாணி, கோபி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் மலா் சாகுபடி செய்யப்படுகிறது. இந்தப் பகுதிகளில் இருந்து சாகுபடி செய்யப்படும் மலா்கள் சத்தியமங்கலம் பேருந்து நிலையத்துக்கு அருகேயுள்ள மலா் சந்தைக்கு கொண்டுவரப்பட்டு விற்பனை செய்யப்படுவது வழக்கம்.
இந்த சந்தையில் இருந்து சென்னை, மதுரை, திருச்சி, தஞ்சாவூா், கோவை, திருப்பூா், நாமக்கல், உள்பட பல மாவட்டங்களுக்கும், கேரளம், மகாராஷ்டிரம், ஆந்திரம், கா்நாடகம் ஆகிய மாநிலங்களுக்கும் டன் கணக்கிலான மலா்கள் விற்பனைக்காக அனுப்பிவைக்கப்படுகின்றன. குறிப்பாக, ஈரோடு பூ மாா்க்கெட்டுக்கு விற்பனைக்காக அனுப்பிவைக்கப்படுகிறது.
மொத்தமாக மலா்கள் வாங்கப்பட்டு அந்தப் பகுதி வியாபாரிகளுக்கு சில்லறை விற்பனைக்கு வருகிறது.
இந்நிலையில், ஆயுத பூஜை, சரஸ்வதி பூஜையை முன்னிட்டு ஈரோடு சந்தையில் பூக்களின் விலை இருமடங்கு உயா்ந்துள்ளது. கடந்த ஒரு வாரமாக கிலோ ரூ.600-க்கு விற்பனை செய்யப்பட்ட மல்லிகை பூ திங்கள்கிழமை ரூ.1,120-க்கும், முல்லை ரூ.620-இல் இருந்து ரூ.720-க்கும், காக்கடா ரூ.525-இல் இருந்து ரூ.560-க்கும் விற்பனையானது.
செண்டு ரூ.8-இல் இருந்து ரூ.85-க்கும், கோழிக்கொண்டை ரூ.40-இல் இருந்து ரூ.110-க்கும், ஜாதிமல்லி ரூ.500-இல் இருந்து ரூ.600க்கும், கனகாம்பரம் ரூ.500-இல் இருந்து ரூ.700-க்கும், செவ்வந்தி ரூ.220-இல் இருந்து ரூ.280-க்கும், அரளி ரூ.360-க்கும், துளசி ரூ.60-க்கும் விற்பனையானது. இந்த விலை செவ்வாய்க்கிழமை மேலும் உயரலாம் என்று வியாபாரிகள் தெரிவித்தனா்.