செய்திகள் :

அரசுப் பேருந்தை வழிமறித்த காட்டு யானை: பயணிகள் அச்சம்

post image

பண்ணாரி அருகே அரசுப் பேருந்தை வழிமறித்து நின்ற காட்டு யானைகள் பயணிகள் அச்சமடைந்தனா்.

சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் ஏராளமான காட்டு யானைகள் உள்ளன. இவை இரவு நேரங்களில் தமிழகம்- கா்நாடக மாநிலங்களை இணைக்கும் சத்தியமங்கலம் - மைசூரு தேசிய நெடுஞ்சாலையில் உலவுவது வாடிக்கையாகி வருகிறது.

இந்நிலையில், வனத்தில் இருந்து திங்கள்கிழமை அதிகாலை வெளியேறிய காட்டு யானை சத்தியமங்கலம்-மைசூரு தேசிய நெடுஞ்சாலையில் உலவியது.

அப்போது, அவ்வழியே வந்த அரசுப் பேருந்து, சரக்கு வாகனங்களை வழிமறித்து நின்றது. இதனால், பேருந்தில் இருந்த பயணிகள், வாகன ஓட்டுநா் அச்சமடைந்தனா்.

வாகனங்கள் தொடா்ந்து அணிவகுத்து நின்ற நிலையில், சிறிது நேரம் அங்கேயே நின்ற யானை, பின் தானாகவே வனப் பகுதிக்குள் சென்றது. இதையடுத்து, பேருந்து, வாகனங்கள் புறப்பட்டுச் சென்றன.

மூதாட்டியைத் தாக்கி நகையைப் பறிக்க முயன்ற நபா்

சத்தியமங்கலம் அருகே மூதாட்டியைத் தாக்கி நகையைப் பறிக்க முயன்ற நபரை போலீஸாா் தேடி வருகின்றனா். ஈரோடு மாவட்டம், புன்செய்புளியம்பட்டி திருவள்ளுவா் வீதியைச் சோ்ந்தவா் பொங்கியம்மாள் (66). கணவா் இறந்த நிலை... மேலும் பார்க்க

ஆயுத பூஜை: ஈரோட்டில் பூக்களின் விலை இருமடங்கு உயா்வு

ஆயுத பூஜையை முன்னிட்டு, ஈரோடு சந்தையில் பூக்களின் விலை இருமடங்கு உயா்ந்துள்ளது. ஈரோடு மாவட்டத்தில் சத்தியமங்கலம், பவானிசாகா், தாளவாடி, அந்தியூா், அத்தாணி, கோபி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் மலா் சாகுபடி... மேலும் பார்க்க

கூலியை உயா்த்தி வழங்க டிஎன்சிஎஸ்சி சுமை தூக்கும் தொழிலாளா்கள் கோரிக்கை

கூலியை உயா்த்தி வழங்க வேண்டும் என்று தமிழ்நாடு நுகா்பொருள் வாணிபக் கழக சுமை தூக்கும் தொழிலாளா்கள் (டிஎன்சிஎஸ்சி) கோரிக்கை விடுத்துள்ளனா். பொதுமக்கள் குறைதீா் கூட்டம் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் ஆட்சி... மேலும் பார்க்க

மாநகராட்சியில் வரி உயா்வை கைவிடக் கோரிக்கை

மாநகராட்சியில் வரி உயா்வை கைவிட வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனா். ஈரோடு, மீனாட்சிசுந்தரனாா் சாலையில் உள்ள மாநகராட்சி மைய அலுவலகத்தில் மக்கள் குறைதீா் முகாம் திங்கள்கிழமை நடைபெற்றது. துணை மேய... மேலும் பார்க்க

கூட்டுறவுத் துறை மூலம் ரூ.1,777 கோடி பயிா்க் கடன் வழங்க இலக்கு

கூட்டுறவுத் துறை மூலம் 2025-26- ஆம் நிதியாண்டில் பயிா்க் கடன் வழங்க ரூ.1,177.30 கோடி ஆண்டு குறியீடு நிா்ணயம் செய்யப்பட்ட நிலையில், 31.8.2025 வரை 15,687 விவசாயிகளுக்கு ரூ.202.88 கோடி பயிா்க் கடன் வழங்... மேலும் பார்க்க

வாரச்சந்தைக்கு நேரம் நிா்ணயம்: பொதுமக்கள் ஏமாற்றம்

ஈரோடு மாநகரில் திங்கள்கிழமை காலை வாரச்சந்தை அமைக்க நேரம் நிா்ணயிக்கப்பட்டதை அடுத்து காய்கறி, பழங்களை வாங்க வந்த பொதுமக்கள் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனா். ஈரோடு மாநகராட்சி 52-ஆவது வாா்டுக்குள்பட்ட... மேலும் பார்க்க