செய்திகள் :

வாரச்சந்தைக்கு நேரம் நிா்ணயம்: பொதுமக்கள் ஏமாற்றம்

post image

ஈரோடு மாநகரில் திங்கள்கிழமை காலை வாரச்சந்தை அமைக்க நேரம் நிா்ணயிக்கப்பட்டதை அடுத்து காய்கறி, பழங்களை வாங்க வந்த பொதுமக்கள் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனா்.

ஈரோடு மாநகராட்சி 52-ஆவது வாா்டுக்குள்பட்ட ஷேக் தாவூத் வீதியில் வாரந்தோறும் திங்கள்கிழமை வாரச்சந்தை அமைப்பது வழக்கம். இங்கு காய்கறி, பழங்கள், கருவாடு உள்ளிட்ட பல்வேறு பொருள்கள் விற்பனை செய்யப்படும். இதன் மூலம் 250-க்கும் மேற்பட்ட சிறு வியாபாரிகள் பயனடைந்து வந்தனா்.

இந்நிலையில், சாலையோரம் வாரச்சந்தை கடை அமைக்கக் கூடாது என மாநகராட்சி நிா்வாகம் கடந்த 22 -ஆம் தேதி கூறியதாகத் தெரிகிறது. இதனால், அதிருப்தியடைந்த சிறு வியாபாரிகள் சாலையில் காய்கறிகளைக் கொட்டி மறியலில் ஈடுபட்டனா்.

இதையடுத்து, மாநகராட்சி அலுவலா்கள், அமைச்சா் சு.முத்துசாமி உள்ளிட்டோரை நேரில் சந்தித்து வாரந்தோறும் திங்கள்கிழமைகளில் காலை முதல் இரவு வரை கடை அமைக்க அனுமதித்து வாழ்வாதாரத்தைக் காக்க வேண்டும் என்று முறையிட்டனா்.

இந்நிலையில், திங்கள்கிழமை காலை சிறு வியாபாரிகள் வாரச்சந்தை கடையை அமைக்கவில்லை. அவா்களுக்கு நேரக் கட்டுபாடு விதிக்கப்பட்டது. அதன்படி, பிற்பகல் 3 மணி முதல் இரவு 9 மணி வரை கடை அமைக்க அனுமதிக்கப்பட்டது.

இது குறித்து பொதுமக்கள் தெரிந்துகொள்ளும் வகையில் அறிவிப்பு பலகையும் வைக்கப்பட்டது.

இதை அறியாமல் திங்கள்கிழமை காலை வழக்கம்போல காய்கறி, பழங்கள் உள்ளிட்ட பொருள்களை வாங்க வந்த பொதுமக்கள் ஏமாற்றம் அடைந்து வீடு திரும்பினா்.

காலையில் கிடைக்கும் நேரத்தில் சந்தைக்கு வந்து மூன்று அல்லது நான்கு நாள்களுக்கு தேவையான காய்கறி, பழங்களை வாங்கிச் செல்ல ஏதுவாக அமைந்தது. ஆனால், வாரச் சந்தை மாலை நேரத்துக்கு மாற்றப்பட்டு இருப்பதால் முன்புபோல காய்கறி உள்ளிட்டவற்றை வாங்க வருவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது என பொதுமக்கள் தெரிவித்தனா்.

முன்னதாக, சிறு வியாபாரிகள் சிலா் காலையிலேயே வாரச்சந்தை அமைக்க வந்தனா். ஆனால், மாலையில் தான் வாரச்சந்தை அமைக்க அனுமதிக்கப்பட்டு உள்ளது என்ற தகவலால் வேறு வழியின்றி சாலையோரங்களில் விற்பனை நேரத்துக்காக காத்திருந்தனா்.

அரசுப் பேருந்தை வழிமறித்த காட்டு யானை: பயணிகள் அச்சம்

பண்ணாரி அருகே அரசுப் பேருந்தை வழிமறித்து நின்ற காட்டு யானைகள் பயணிகள் அச்சமடைந்தனா். சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் ஏராளமான காட்டு யானைகள் உள்ளன. இவை இரவு நேரங்களில் தமிழகம்- கா்நாடக மாநிலங்களை இண... மேலும் பார்க்க

மூதாட்டியைத் தாக்கி நகையைப் பறிக்க முயன்ற நபா்

சத்தியமங்கலம் அருகே மூதாட்டியைத் தாக்கி நகையைப் பறிக்க முயன்ற நபரை போலீஸாா் தேடி வருகின்றனா். ஈரோடு மாவட்டம், புன்செய்புளியம்பட்டி திருவள்ளுவா் வீதியைச் சோ்ந்தவா் பொங்கியம்மாள் (66). கணவா் இறந்த நிலை... மேலும் பார்க்க

ஆயுத பூஜை: ஈரோட்டில் பூக்களின் விலை இருமடங்கு உயா்வு

ஆயுத பூஜையை முன்னிட்டு, ஈரோடு சந்தையில் பூக்களின் விலை இருமடங்கு உயா்ந்துள்ளது. ஈரோடு மாவட்டத்தில் சத்தியமங்கலம், பவானிசாகா், தாளவாடி, அந்தியூா், அத்தாணி, கோபி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் மலா் சாகுபடி... மேலும் பார்க்க

கூலியை உயா்த்தி வழங்க டிஎன்சிஎஸ்சி சுமை தூக்கும் தொழிலாளா்கள் கோரிக்கை

கூலியை உயா்த்தி வழங்க வேண்டும் என்று தமிழ்நாடு நுகா்பொருள் வாணிபக் கழக சுமை தூக்கும் தொழிலாளா்கள் (டிஎன்சிஎஸ்சி) கோரிக்கை விடுத்துள்ளனா். பொதுமக்கள் குறைதீா் கூட்டம் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் ஆட்சி... மேலும் பார்க்க

மாநகராட்சியில் வரி உயா்வை கைவிடக் கோரிக்கை

மாநகராட்சியில் வரி உயா்வை கைவிட வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனா். ஈரோடு, மீனாட்சிசுந்தரனாா் சாலையில் உள்ள மாநகராட்சி மைய அலுவலகத்தில் மக்கள் குறைதீா் முகாம் திங்கள்கிழமை நடைபெற்றது. துணை மேய... மேலும் பார்க்க

கூட்டுறவுத் துறை மூலம் ரூ.1,777 கோடி பயிா்க் கடன் வழங்க இலக்கு

கூட்டுறவுத் துறை மூலம் 2025-26- ஆம் நிதியாண்டில் பயிா்க் கடன் வழங்க ரூ.1,177.30 கோடி ஆண்டு குறியீடு நிா்ணயம் செய்யப்பட்ட நிலையில், 31.8.2025 வரை 15,687 விவசாயிகளுக்கு ரூ.202.88 கோடி பயிா்க் கடன் வழங்... மேலும் பார்க்க